கஜ்ரானா கணேஷ் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஜ்ரானா கோயில் கட்டிடம்

கஜ்ரானா கணேஷ் கோயில் (Khajrana Ganesh Temple) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசம் - இந்தூரில் கஜ்ரானா பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து கோயில் ஆகும். இந்த கோயில் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஓல்கர் வம்சத்தின் மகாராணி அகில்யாபாய் ஓல்கரால் கட்டப்பட்டது.

வரலாறு[தொகு]

இந்த கோயில் 1735 ஆம் ஆண்டு ஓல்கர் வம்சத்தின் மகாராணி அகில்யாபாய் ஓல்ரால் கட்டப்பட்டது, இவர் முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பிடம் இருந்து பாதுகாக்க வேண்டி, கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மீட்டார் என்று இந்த கோயிலின் வரலாறு அறியப்படுகின்றது. இங்கு, பக்தர்கள் கோயிலை சுற்றி வந்து, விநாயகப் பெருமானிடம் தங்கள் பணியை வெற்றிகரமாக முடிப்பதற்காக ஒரு நூல் கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள். கோயிலில் உள்ள பழமையான சிலை உள்ளூர் பூசாரியான பண்டிதர் மங்கல் பட் என்பவரின் கனவில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் இன்றும் அவரின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.

வளர்ச்சி[தொகு]

ஒரு சிறிய குடிசையில் இருந்து ஒரு பெரிய வளாகமாக, இந்த கோயில் பல ஆண்டுகளாக நிறைய வளர்ந்துள்ளது. [1] கோயிலுக்கு தொடர்ந்து பணம், தங்கம், வைரம் மற்றும் பிற விலையுயர்ந்த நகைகள் நன்கொடை வடிவில் பெறப்படுகின்றன. [2] கர்ப்பகிரகத்தின் வாயில், வெளி மற்றும் மேல் சுவர்கள் வெள்ளியால் ஆனவை. மேலும், அதில் வெவ்வேறு மனநிலைகள் மற்றும் திருவிழாக்கள் குறித்த சிற்பங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாகக் கொடுத்த வைரங்களால் கடவுளின் கண்கள் செய்யப்பட்டுள்ளன. [3]

தற்போது இந்த கோயில், இந்தூர் மாவட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் பூசாரிகள் மாத சம்பளத்தில் உள்ளனர். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளும் எளிதில் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜ்ரானா_கணேஷ்_கோயில்&oldid=3844868" இலிருந்து மீள்விக்கப்பட்டது