கச்சாப்பூரி
Appearance
கச்சாப்பூரி என்பது பாலாடைக்கட்டியால் நிரப்பப்பட்டு தயாரிக்கப்படும் ஜார்ஜியாவின் பாரம்பரிய ரொட்டிவகை ஆகும். பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படும் இவ்வகை ரொட்டி பெரும்பாலும் பாலாடைக்கட்டி மற்றும் முட்டையினால் நிரப்பப்பட்டு சுடப்படுகிறது.[1]
வகை | உரொட்டி |
---|---|
தொடங்கிய இடம் | ஜார்ஜியா |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூட்டுடன் |
முக்கிய சேர்பொருட்கள் | பாலாடைக்கட்டி, முட்டை, மாவு |
வகைகள்
[தொகு]கச்சாப்பூரிகள் வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
- இமெரட்டியன் கச்சாப்பூரி (இமெருலி) மிகவும் பிரபலமானது. இதுவே அடிப்படையான கச்சாப்பூரி ஆகும். இமெரட்டியன் என்கிற இடத்தில் தோன்றியதால் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது.[2]
- அட்ஜாரிய கச்சாப்பூரி கப்பல் வடிவத்தில் இருக்கிறது. இவற்றை ஜார்ஜிய மாலுமிகள் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.[3]
- மெக்ரேலிய கச்சாப்பூரியில் மிகுதியான பாலாடைக்கட்டி சேர்க்கப்படுகிறது.
- குரியன் கச்சாப்பூரி வேகவைத்த முட்டைகளால் நிரப்பப்பட்டு பரிமாறப்படுகிறது.
- ஒசேட்டியன் அல்லது கபிஃஸ்கினி கச்சாப்பூரி உருளைக்கிழங்கும் முட்டையும் கொண்டு நிரப்பப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]புற இணைப்புகள்
[தொகு]- Revolution of khachapuri
- Recipe at RecipeSource
- Recipe at New York Times
- "Georgia's addictive cousin to pizza?". bbc.com. பிபிசி. 21 November 2017. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.