கங்கா (திரைப்படம்)
தோற்றம்
| கங்கா | |
|---|---|
| இயக்கம் | கர்ணன் |
| தயாரிப்பு | கர்ணன் இந்திராணி பிலிம்சு |
| கதை | மகேந்திரன் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் ராஜ கோகிலா |
| வெளியீடு | சனவரி 15, 1972 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4124 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கங்கா (Ganga) 1972 இல் எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். மேற்கத்திய திரைப்படங்களைத் தழுவிய இப்படத்தில் ஜெய்சங்கர் ராஜ்கோகிலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1972 சனவரி 15 அன்று வெளியிடப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
நடிகர்கள்
[தொகு]- கங்காவாக ஜெய்சங்கர்
- எஸ். ஏ. அசோகன்[1]
- கதிர்வேலுவாக மேஜர் சுந்தர்ராஜன்
- நாகேஷ்
- கௌரியாக ராஜகோகிலா [2]
- சித்தூர் வி. நாகையா[2]
- எஸ். என். லட்சுமி
- அ. சகுந்தலா
- ஜெயகுமாரி
- பக்கோடா காதர்
- விஜயரேகா
தயாரிப்பு
[தொகு]இந்திராணி பிலிம்சு தயாரித்த கங்கா திரைப்படத்தை எம். கர்ணன் இயக்கினார். கதையை மகேந்திரன் எழுதியுள்ளார். உரையாடலை மா. ரா எழுதியுள்ளார். படத்தொகுப்பை ஜி. கல்யாணசுந்தரம் மேற்கொண்டார்.
பாடல்கள்
[தொகு]இரட்டையர்கள் சங்கர்-கணேஷ் இசையமைத்த இப்படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர் | நீளம் | |||||||
| 1. | "ஆகட்டும் பார்க்கலாம்" | எல். ஆர். ஈஸ்வரி | ||||||||
| 2. | "ஆணா பெண்ணா சரித்திரம்" | எல். ஆர். ஈஸ்வரி | ||||||||
வெளியீடும் வரவேற்பும்
[தொகு]கங்கா திரைப்படம் 1972 சனவரி 15 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மேற்கத்திய திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.[4][5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pillai 2015, ப. 178.
- ↑ 2.0 2.1 Pillai 2015, ப. 172.
- ↑ "Ganga". Tamil Songs Lyrics. Archived from the original on 10 சூலை 2023. Retrieved 10 சூலை 2023.
- ↑ Mahendran 2013, ப. 344.
- ↑ "Irumbu Kottai Murattu Singam". Sify. 7 மே 2010. Archived from the original on 8 மே 2019. Retrieved 19 மே 2019.
- ↑ சனா (8 மே 2020). "கெளபாய் படமும், லாரன்ஸ் மாஸ்டரும் பின்னே அந்தக் குதிரையும்! - இயக்குநர் சிம்புதேவன்". ஆனந்த விகடன். Archived from the original on 10 சூலை 2023. Retrieved 10 சூலை 2023.
- ↑ சிவகுமார் (2 ஏப்பிரல் 2021). "திரைப்படச்சோலை 19: ஜெய்சங்கர்". இந்து தமிழ் திசை. Archived from the original on 10 சூலை 2023. Retrieved 10 சூலை 2023.
{{cite web}}: Check date values in:|date=(help)