கங்கவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கங்கவார் எனப்படுபவர் கங்கவார் நாயுடு என்று அழைக்கபடுவர் மேலும் இவர்கள் போய நாயக்கர்களின் ஒரு பிரிவே ஆவர். இவ்வேட குடும்பம் இராமாயணம் எழுதிய கிராத் (Kirat ) எனும் வம்சாவளியான வால்மீகி முனிவரின் குலத்தினை சார்ந்தவர்களாவர். நாயக் (Nayak) எனும் பெயர், மலைமீது வேட்டையாடும் போயர் என்றழைக்கபடும் வேடர்களின் பரம்பரை பட்டமாகும்,[1] மேலும் ஓடும் நீரில் மீன்களை வேட்டையாடும் இனமான வால்மீகி மக்கள் என அழைக்கப்படும். போய பாளையக்காரர்கள் ஒரு பிரிவே முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கராவார். முடிராஜ் இனத்தினை முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோழி என்று அந்திரப் பிரதேசதிலும், கங்கவார்,கங்கமதா,பேஸ்த, போய, கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோழி என்றும் கருநாடகத்தில் அழைக்கபடுவர். தமிழகத்தில் முத்திரையர் மற்றும் முத்தரையர்,முத்துராஜா என்றழைப்பர் மேலும் இம்மக்களை இந்தியாவின் வடமாநிலங்களில் கோலி (Koli) என்றும் அழைப்பர்.[2] இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும், முழுமையான கருநாடகப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளையும் போய நாயக்கர்கள் பாளையங்களாக பிரித்து அரசாண்டது வரலாற்றுச்சுவடுகள் மூலம் அறியப்படுகின்றது .[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson Hunter, William (1885). The imperial gazetteer of India - Contributor: University of Massachusetts, Boston. 3. London: Trübner & co.. பக். 50-56. http://www.ebooksread.com/authors-eng/william-wilson-hunter/the-imperial-gazetteer-of-india-volume-3-tnu/page-51-the-imperial-gazetteer-of-india-volume-3-tnu.shtml. பார்த்த நாள்: 2012-10-17. 
  2. – CHANGE OF GROUP FROM ‘D’ TO GROUP ‘A’ IN THE LIST of B.C.s, MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE (1994). Castes and Tribes of Southern India. pdf. Andhra Pradesh: Government Press. பக். 1 இம் மூலத்தில் இருந்து 2013-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130123141926/http://www.aponline.gov.in/APPORTAL/Departments/BC%20Welfare%20Reports/PDFS/2009/MUDIRAJ%20CASTE.pdf. பார்த்த நாள்: 2012-10-10. 
  3. "SURNAMES OF MUDIRAJA / MUTHURAJA COMMUNITY IN SOUTH INDIA". Maharastr,India. 2008. p. 1. Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
  4. "Valmiki Research Centre". Valmiki Research Kendra, Sangrur (Pb.): Valmiki Research India. 2011. p. 1. Archived from the original on 2012-04-30. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12. {{cite web}}: |first1= missing |last1= (help); |first2= missing |last2= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கவார்&oldid=3547300" இலிருந்து மீள்விக்கப்பட்டது