ககன்தீப் காங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ககன்தீப் காங்கு FNA, FASc, FRS[1] (பி. நவம்பர் 3, 1962 ), குழந்தைகளில் வைரசு தொற்றுகள் மற்றும் ரோட்டா வைரஸ் தடுப்பூசிகளின் சோதனை ஆகிய புலங்களில் ஒரு முன்னணி ஆராய்ச்சியாளர் ஆவார். 2019 ஆம் ஆண்டில், அரசக் குமுகத்தின் உறுப்பினராகத் (ராயல் சொசைட்டி ஃபெலோ) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றார். [2]

தொழிலும் ஆராய்ச்சியும்[தொகு]

1990களின் முற்பகுதியில் இருந்து இந்தியாவில் வயிற்றுப்போக்கு நோய்கள் மற்றும் பொது சுகாதாரம் குறித்து பணியாற்றிய வரும் மருத்துவ விஞ்ஞானி ஆவார் காங்கு. இந்தியாவில் ரோட்டா வைரசு தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி துறையில் முக்கிய பங்களிப்பாளராக உள்ளார் . பின்தங்கிய சமூகங்களில் உள்ள சிறு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள், நுரையீரல் நோய்த்தொற்றுகள் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் கவனம் செலுத்திய அவர், தீவிர ஆய்வக ஆராய்ச்சியுடன் கூடிய கள நோய்ப்பரவு இயலை இணைத்து இந்தியாவில் தொற்று நோய்களின் அறிவியல் மற்றும் கொள்கை ஆகியவற்றை உருவாக்க விழைகிறார். இந்தியா முழுவதும் ரோட்டா வைரசு நோயினால் ஏற்படும் அதிக பாதிப்பு, வைரசுகளின் மரபணுப் பன்மயம் மற்றும் வாய்வழி தடுப்பூசிகளின் செயல்திறனை மேம்படுத்த பல அணுகுமுறைகளை ஆராய்வது ஆகிய பலவற்றை ரோட்டா வைரசு குறித்த அவரது விரிவான ஆராய்ச்சி அளித்துள்ளது. இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவின் "தடுப்பூசி அறிவுத்தாய்" என்ற பெயரை அவருக்குப் பெற்றுத்தந்தன. [3]

ககன்தீப் காங்கு
FNA, FASc, FRS
பிறப்புநவம்பர் 3, 1962 (1962-11-03) (அகவை 61)
தேசியம்Indian
துறைதொற்று நோய்
தடுப்பு மருந்து
குடல்நோய் தொற்று
தண்ணீர்
சுகாதாரம்
பணியிடங்கள்கிருத்தவ மருத்துவக் கல்லூரி
பேலர் மருத்துவக் கல்லூரி
கல்விMBBS, MD, PhD, FRCPath
கல்வி கற்ற இடங்கள்கிருத்தவ மருத்துவக் கல்லூரி
விருதுகள்இன்போசிசு பரிசு (2016)
இணையதளம்
cmcwtrl.in
  1. "Gagandeep Kang - Royal Society". Royalsociety.org. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
  2. "Gagandeep Kang becomes first Indian woman to be elected Royal Society Fellow". https://www.thehindu.com/sci-tech/science/gagandeep-kang-becomes-first-indian-woman-to-be-elected-royal-society-fellow/article26887069.ece. பார்த்த நாள்: 2019-10-02. 
  3. Mohan, Shriya. "'Stick it out and make good friends'". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககன்தீப்_காங்கு&oldid=3396444" இலிருந்து மீள்விக்கப்பட்டது