ஓபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாகசுரம் போன்று காட்சியளிக்கும், இனமான, பழைய ஓபோ. இது யோகான் பிரீடரிக் ஃவிளாத் (Johann Friedrich Floth) என்பாருடைய (1805 ஆண்டு) ஓபோவின் படி (copy). இப்படியைச் செய்தது சாண்டு டால்ட்டன் (Sand Dalton).

ஓபோ (Oboe) என்பது நாகசுரம், ஷெனாய் போன்ற ஒரு குழல்வகை காற்றிசைக் கருவி. இதன் ஊதும் பக்கத்தில் சீவாளி போன்ற பகுதி இருக்கும், இது இரட்டைப்பட்டை உடைய, ஒருவகை காய்ந்த புல் இன மடலைக்கொண்டு செய்யப்படுவது. ஓபோ இது பெரும்பாலும் மேற்கிசையில், சேர்ந்திசை போன்ற குழு இசை நிகழ்வுகளில் பயன்படுகின்றது. இக்கருவி 1770களில் பிரான்சிய மொழியில் ஓட்புவா ( "hautbois") என்றும் ஓபோய் ("hoboy") என்றும் அழைக்கப்பட்டு இத்தாலிய மொழி வடிவாகிய oboè, என்பதைப் பின்பற்றி ஆங்கிலத்தில் 1770 களில் பயன்பாட்டுக்கு வந்தது. அதிக எடுப்பான (உரத்த) ஒலி எழுப்புவதால் ஓட் (haut = "high, loud") என்று முன்னொட்டுப் பெயர் பெற்றது.

தற்கால ஓபோ

ஓபோ இசையைக் கேட்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபோ&oldid=3237441" இருந்து மீள்விக்கப்பட்டது