ஓபெர் இலகாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ofer Lahav
FRAS FInstP
Professor Ofer Lahav
பிறப்பு5 ஏப்ரல் 1959 (1959-04-05) (அகவை 64)
Tiberias, Israel
குடியுரிமைDual Israeli-British
துறை
பணியிடங்கள்University College London
University of Cambridge
Ben-Gurion University
Tel Aviv University
ஆய்வேடுAnisotropies in the Local Universe (1988)
ஆய்வு நெறியாளர்George Efstathiou[சான்று தேவை]
Donald Lynden-Bell[சான்று தேவை]
Other academic advisorsJacob Bekenstein
குறிப்பிடத்தக்க மாணவர்கள்Chris Lintott[1]
விருதுகள்
இணையதளம்
www.ucl.ac.uk/astrophysics/professor-ofer-lahav


ஓபெர் இலகாவ்(Ofer Lahav) (எபிரேயம்: עופר להב‎)) இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் வானியல் பெரென் இருக்கை (UCL) பேராசிரியரும் பன்னாட்டுக்கணித, இயற்பியல் அறிவியல் புலத்தின்(MAPS) துணைப் புலமுதல்வரும் (மற்றும் தரவு அறிவியல் முனைவர் பயிற்சி (STFC) மையத்தின் இணை இயக்குநரும் ஆவார். இவரது ஆராய்ச்சி, குறிப்பாக இருண்ட பொருள், இருண்ட ஆற்றல் சார்ந்த நோக்கீட்டு அண்டவியல் ஆகும். அவரது பணி பேரளவு தரவுகளுக்கான எந்திரக் கற்றலையும் உள்ளடக்கியதாகும்.

இவர் UCL வானியற்பியல் தலைவராகவும் (2004-2011), UCL இன் கணிதம் மற்றும் இயற்பியல் அறிவியல் புலத் துணைப் புலமுதல்வராகவும் (ஆராய்ச்சி) (2011-2015) அரசு வானியல் கழகத்தின் துணைத் தலைவராகவும் (2010-2012). டார்க் எனர்ஜி சர்வேயின் (DES) நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார். மேலும் அவர் பன்னாட்டு DES அறிவியல் குழுவில் தொடக்கத்திலிருந்து 2016 வரை இணைத் தலைவராக இருந்தார். இவர் DES:UK , DESI :UK கூட்டமைப்பு , DES அறிவுரை வாரியம் ஆகியவற்றுக்கும் தலைமை தாங்குகிறார். அவர் முன்பு STFC அறிவியல் வாரியத்தின் (2016-2019) உறுப்பினராகவும் பணியாற்றினார். 2012 முதல் 2018 வரை, இவர் ஐரோப்பிய ஆராய்ச்சி மன்ற (ERC) " இருண்ட ஆற்றல் சோதிப்புச் சட்டகம்" உயர்நல்கைத் திட்டத்தை " (TESTDE திட்டம்) வழிநடத்தினார்.

கல்வி[தொகு]

இவர் டெல்-அவிவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் 1980 இல் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். இவர் பென்-குரியன் பல்கலைக்கழகத்தில் 1985 இல் மூதறிவியல் பட்டத்தை இயற்பியலில் பெற்றார். இவர் முனைவர் பட்டத்தை வானியலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1988 இல் பெற்றார்.[2] அங்கு அவர் பின்னர் 1990 முதல் 2003 வரை வானியல் நிறுவன ஊழியர்களின் உறுப்பினராக இருந்தார். கேம்பிரிட்ஜ்.செயின்ட் கேதரின் கல்லூரியில் ஆய்வுறுப்பினராக இருந்தார்,

ஆராய்ச்சி[தொகு]

இவரது ஆராய்ச்சி இருண்ட பொருள், இருண்ட ஆற்றல் சார்ந்த அண்டவியல் ஆய்வுகளில் கவனம் செலுத்துகிறது.[3][4][5][6][7][8][9][10][11][12][13] இணை மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழ்களில் 400 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை இவர் இணைந்து எழுதியுள்ளார் , இவற்றில் 10 அழைக்கப்பட்ட மதிப்பாய்வு கட்டுரைகளும் புத்தக இயல்களும் அடங்கும். இவர் ஒரு தாம்சன் ஐஎஸ்ஐயால் மேற்கோள் காட்டப்பட்ட எழுத்தாளர் ஆவார். இவரது எச் - சுட்டி எண்ணிக்கை 83 ஆகும். இவரது கடந்தகால முனைவர் பட்ட மாணவர்களில் கிறிசு இலின்டாட்டும் அடங்குவார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Lintott, Christopher John (2006). Analyses of the early stages of star formation. discovery.ucl.ac.uk (PhD thesis). University College London. OCLC 926299378. வார்ப்புரு:EThOS. வார்ப்புரு:Free access
 2. Lahav, Ofer (1988). Anisotropies in the local universe. lib.cam.ac.uk (PhD thesis). University of Cambridge. OCLC 557212691. வார்ப்புரு:EThOS.
 3. Palmese, A; Hartley, W.; Tarsitano, F.; Conselice, C.; Lahav, O.; DES Collaboration (2017). "Evidence for Dynamically Driven Formation of the GW170817 Neutron Star Binary in NGC 4994". The Astrophysical Journal Letters 849 (2): L34. doi:10.3847/2041-8213/aa9660. Bibcode: 2017ApJ...849L..34P. 
 4. Sadeh, I.; Feng, L.L.; Lahav, O. (2015). "Gravitational redshift in clusters from the SDSS and BOSS". Physical Review Letters 114 (7): 071103. doi:10.1103/PhysRevLett.114.071103. பப்மெட்:25763947. 
 5. Thomas, S.A.; Abdalla, F.B.; Lahav, O (2010). "Upper Bound of 0.28eV on the Neutrino Masses from the Largest Photometric Redshift Survey". Physical Review Letters 115 (3): 031301. doi:10.1103/PhysRevLett.105.031301. பப்மெட்:20867754. Bibcode: 2010PhRvL.105c1301T. 
 6. Collister, A.; Lahav, O. (2004). "ANNz: estimating photometric redshifts using artificial neural networks". Publications of the Astronomical Society of the Pacific 116 (818): 345–351. doi:10.1086/383254. Bibcode: 2004PASP..116..345C. 
 7. Dekel, A.; Lahav, O. (1999). "Stochastic Nonlinear Galaxy Biasing". The Astrophysical Journal 520 (1): 24–34. doi:10.1086/307428. Bibcode: 1999ApJ...520...24D. 
 8. Lahav, O.; Lilje, P.B.; Primack, J.R.; Rees, M.R. (1991). "Dynamical effects of the cosmological constant". Monthly Notices of the Royal Astronomical Society 251: 128–136. doi:10.1093/mnras/251.1.128. Bibcode: 1991MNRAS.251..128L. 
 9. The DES Collaboration (2018). "Dark Energy Survey Year 1 Results: Cosmological Constraints from Galaxy Clustering and Weak Lensing". Physical Review D 98 (4): 043526. doi:10.1103/PhysRevD.98.043526. Bibcode: 2018PhRvD..98d3526A. 
 10. The DES Collaboration (2016). "The Dark Energy Survey: more than Dark Energy – an overview". Monthly Notices of the Royal Astronomical Society 460 (2): 1270–1299. doi:10.1093/mnras/stw641. Bibcode: 2016MNRAS.460.1270D. 
 11. Cole, S.; 2dFGRS Team (incl OL) (2005). "The 2dF Galaxy Redshift Survey: power spectrum analysis of the final data set and cosmological implications". Monthly Notices of the Royal Astronomical Society 362 (2): 505–534. doi:10.1111/j.1365-2966.2005.09318.x. Bibcode: 2005MNRAS.362..505C. 
 12. Lahav, O.; 2dFGRS team (2002). "The 2dF Galaxy Redshift Survey: the amplitudes of fluctuations in the 2dFGRS and the CMB, and implications for galaxy biasing". Monthly Notices of the Royal Astronomical Society 333 (4): 961–968. doi:10.1046/j.1365-8711.2002.05485.x. Bibcode: 2002MNRAS.333..961L. 
 13. Fisher, K.B.; Lahav, O.; Hoffman, Y.; Lynden-Bell, D.; Zaroubi, S. (1995). "Wiener reconstruction of density, velocity, and potential fields from all-sky galaxy redshift surveys". Monthly Notices of the Royal Astronomical Society 272 (4): 885–908. doi:10.1093/mnras/272.4.885. Bibcode: 1995MNRAS.272..885F. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபெர்_இலகாவ்&oldid=3779059" இருந்து மீள்விக்கப்பட்டது