உள்ளடக்கத்துக்குச் செல்

ஓபராய் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓபராய் ஹோட்டல்களும் ரிசார்ட்டுகளும்
Oberoi Hotels & Resorts
வகைஉணவகம், தங்குமிடம்
நிறுவுகை1934
நிறுவனர்(கள்)லால் பகதூர் மோகன் சிங் ஓபராய்
தலைமையகம்தில்லி, இந்தியா
முதன்மை நபர்கள்பி.ஆர்.எஸ். ஓபராய், விக்ரம் ஓபராய், அர்ஜுன் ஓபராய்
தொழில்துறைவிருந்தோம்பல்
உற்பத்திகள்ஹோட்டல்கள்
தாய் நிறுவனம்கிழக்கிந்திய ஹோட்டல்கள் (East India Hotels)
இணையத்தளம்Oberoi Hotels & Resorts

ஓபராய் குழுமம் இந்தியா முழுவதும் ஹோட்டல்களை நடத்தும் ஒரு நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது.[1] திரு.

ஓபராய் 1934 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தினை நிறுவினார். தற்போது சொந்தமாகவோ, நிர்வகிக்கும்படியாகவோ மொத்தம் ஐந்து நாடுகளில் இருபதுக்கும் மேற்பட்ட ஹோட்டல்களும் இரண்டு கப்பல்களும் இவர்களின் நிறுவனத்திடம் உள்ளன. சிறந்த ஹோட்டல்களை நிர்வகிக்கும் நிறுவனங்களில் இவர்களின் நிறுவனமும் ஒரு முக்கிய நிறுவனம் ஆகும். பயணம், தங்குதல் சம்பந்தப்பட்ட பல முக்கிய விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.[2]

ஹோட்டல்கள்

[தொகு]

1934 ஆம் ஆண்டு ராய் பகதூர் மோகன் சிங் ஓபராய், ஒரு ஆங்கிலேயரிடம் இருந்து டெல்லியிலும் சிம்லாபகுதிகளிலும் இருந்த ஹோட்டல்களை வாங்கினார். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனரும் ஓபராய் தான். பின்னர் தனது இரு மகன்களான திலக் தாஜ் சிங் ஓபராய் மற்றும் பிரத்திவி ராஜ் சிங் ஓபராய் ஆகியோரின் துணைகொண்டு தனது நிறுவனத்தினை இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் விரிவுபடுத்தத் தொடங்கினார். அதன்பின்னர் இந்நிறுவனம் டிரைடெண்ட் ஹோட்டல்களை இந்தியா மற்றும் சவுதி அரேபியாவில் விரிவுபடுத்தியது.

அமைந்துள்ள இடங்கள்

[தொகு]

இந்தியா

  • ஓபராய், புது டெல்லி[3]
  • ஓபராய், பெங்களூர்
  • ஓபராய் கிராண்ட், கொல்கத்தா
  • ஓபராய், மும்பை
  • ஓபராய் அமர்விலாஸ், ஆக்ரா
  • ஓபராய் ராஜ்விலாஸ், ஜெய்ப்பூர்
  • ஓபராய் உதைவிலாஸ், உதய்ப்பூர் (2012, உலகின் தலைசிறந்த ஹோட்டல்களில் நான்காமிடம்)[4]
  • வைல்டுஃபிளவர் ஹால், இமயமலையில் உள்ள சிம்லா
  • ஓபராய் செசில், சிம்லா
  • ஓபராய், மோட்டார் வெசல் வ்ரிந்தா, கடல் உப்பங்கழி, கேரளா
  • ஓபராய் வான்யாவிலாஸ், சவாய் மதோபுரின் ரந்தாம்போர்
  • ஓபராய், குர்கான்

இந்தோனேசியா

  • ஓபராய், பாலி
  • ஓபராய், லம்போக்
மொரீஷியஸ்:
  • ஓபராய், மொரீஷியஸ்
எகிப்து:
  • ஓபராய், சஹ்ல் ஹஷீஷ், சிவப்புக் கடல்
  • ஓபராய் சஹ்ரா, சொகுசு நைல் கப்பல்
  • ஓபராய் பில்ளே, நைல் கப்பல்

சவுதி அரேபியா

  • ஓபராய், மடினா

அரபு எமிரேட்ஸ்

  • ஓபராய், துபாய்

டிரைடெண்ட் ஹோட்டல்கள்

  • டிரைடெண்ட், ஆக்ரா
  • டிரைடெண்ட், புவனேஸ்வர்
  • டிரைடெண்ட், சென்னை
  • டிரைடெண்ட், கொச்சி
  • டிரைடெண்ட், குட்கான்
  • டிரைடெண்ட், ஜெய்ப்பூர்
  • டிரைடெண்ட், பந்தரா குர்லா, மும்பை
  • டிரைடெண்ட், நரிமன் பாயிண்ட், மும்பை
  • டிரைடெண்ட். உதய்பூர்
  • டிரைடெண்ட், ஹைதராபாத்

இந்தியாவில் உள்ள மற்ற ஹோட்டல்களின் குழு

  • கிளார்க்ஸ் ஹோட்டல், சிம்லா
  • மெய்டன்ஸ் ஹோட்டல், டெல்லி

விருதுகள்

[தொகு]
Oberoi Grand Hotel in Kolkata.
  1. வான்யவிலாஸ் (ரந்தாம்போர்) ஆசியாவின் சிறந்த 15 ரிசார்ட்ஸ் வரிசையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது – கோண்ட் நாஸ்ட் டிராவலர், அமெரிக்கா 2012 [5]
  2. ஓபராய் அமர்விலாஸ், ஆக்ரா – உலகின் சிறந்த ஹோட்டல்களின் வரிசையில் ஐந்தாவது இடம்
  3. ஓபராய் ராஜ்விலாஸ், ஜெய்பூட் – உலகின் சிறந்த ஹோட்டல்களின் வரிசையில் 13 வது இடம்
  4. ஓபராய் உதைவிலாஸ், உதய்பூர் – உலகின் சிறந்த ஹோட்டல்களின் வரிசையில் நான்காவது இடம்
  5. அமெரிக்கா வெளியிலுள்ள ஹோட்டல் குழுமங்களின் வரிசையில் ஓபராய் ஹோட்டல்கள் முன்னிலையில் உள்ளது (2007)
  6. லண்டனுக்கு வெளியிலுள்ள ஹோட்டல் குழுமங்களின் வரிசையில் ஓபராய் ஹோட்டல்கள் முன்னிலையில் உள்ளது (2008)
  7. கலிலியோ எக்ஸ்பிரஸ் டிராவல் வேர்ல்ட் விருதுகளில் ‘சிறந்த முதல்தர் ஹோட்டல் நிறுவனம்’ என்ற விருது 2004 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகள் வழங்கப்பட்டது.
  8. CNBC ன் 2008 ஆம் ஆண்டுக்கான டிராவல் விருதுகளில் ‘இந்தியாவின் சிறந்த வணிக ஹோட்டல்’ என்ற விருது வழங்கப்பட்டது.

கேலரி

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Contact Us". Oberoi Group."Oberoi Hotels & Resorts 7, Sham Nath Marg, Delhi-110 054, India" World's Best Hotels 2012 Travel and Leisure. 14 November 2012.
  2. "World's Leading Luxury Hotel Brand Award". World Travel Awards.
  3. "Oberoi Group Hotels In New Delhi". cleartrip.com.
  4. "World's Best Hotels 2012 Travel and Leisure". Travelandleisure.
  5. "Oberoi Hotels Awards". Oberoihotels.com.