உள்ளடக்கத்துக்குச் செல்

ஓக்கினாவா தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓக்கினாவா
Okinawa
உள்ளூர் பெயர்: 沖縄本島
புவியியல்
அமைவிடம்அமைதிப் பெருங்கடல்
ஆள்கூறுகள்26°30′N 127°56′E / 26.500°N 127.933°E / 26.500; 127.933
தீவுக்கூட்டம்ஓக்கினாவா தீவுகள்
பரப்பளவு1,201.03 km2 (463.72 sq mi)
நிர்வாகம்
Japan
மாகாணம்ஓக்கினாவா மாகாணம்
பெரிய குடியிருப்புநாகா (மக். 313,970)
மக்கள்
மக்கள்தொகை1,384,762 (2009)
அடர்த்தி1,015.79 /km2 (2,630.88 /sq mi)
நீல மண்டலத்தில் உள்ள லோமா லிண்டா, சார்தீனியா, நிகோயா மூவலந்தீவு, இகாரியா மற்றும் ஓக்கினாவா தீவுளைக் காட்டும் வென் படம்

ஓக்கினாவா தீவு (Okinawa Island) என்பது சப்பானில் ஓக்கினாவா மாகாணத்தில் கிழக்கு சீனக்கடலிலுள்ள ஒரு தீவும் ஓக்கினாவா தீவுக் கூட்டத்தின் மிகப் பெரியதும், சப்பானியத் தீவுகளில் ஐந்தாவது பெரியதும் ஆகும். இது பாரிய இரியூக்கியூ தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது. இது 112 கிலோ மீட்டடர் நீளமும் 11 கிலோ மீட்டர் அகலமும் 1199 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டது. ஓக்கினாவா மாகாணத் தலைநகர் நாகா ஓக்கினாவா தீவில் அமைந்துள்ளது.

நீல மண்டலத்தில் அமைந்த இத்தீவில் வசிப்போர் (நடுநிலக் கடல் பகுதியில் வாழும் சார்தீனியர்களைப் போன்று) உலகின் நீண்ட காலம் உயிர் வாழ்வோர் எனப்பெயர் பெற்றிருக்கின்றனர். ஒவ்வொரு 100,000 பேருக்கும் 34 பேர் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்கின்றனர். இது சப்பானின் தரவுகளை விட மூன்று மடங்காகும்.[1]

இரண்டாவது உலகப் போரின் போது அமெரிக்கப் படைகளுக்கும் சப்பானியப் படையினருக்கும் இடையே கடும் போர் இங்கு நடைபெற்றது. 1945இல் அமெரிக்கப் படைகள் வெற்றி பெறும் முனைப்புடன் இத்தீவில் வந்தபோது சப்பானியப் படையினரின் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. மூன்று மாதகால சண்டையில் இருதரப்பினருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டது. முடிவில் அமெரிக்கப் படை வெற்றி பெற்றது. 1972இல் இத்தீவு சப்பானியரிடம் திருப்பி அளிக்கப்பட்டது. இருப்பினும் இன்றும் அமெரிக்கப் போர்த்தளம் இங்குள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Beare, Sally (2005). 50 Secrets of the World's Longest Living People. Da Capo Press. p. 304.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓக்கினாவா_தீவு&oldid=3667055" இலிருந்து மீள்விக்கப்பட்டது