ஒலுவாபெமி பாலோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலுவாபெமி பாலோகன்
Oluwafemi Balogun
நாடுநைசீரியா
பிறப்பு1987
தலைப்புஅனைத்துலக சதுரங்க மாசுட்டர் (2017)

ஒலுவாபெமி பாலோகன் (Oluwafemi Balogun) என்பவர் ஒரு நைசீரியா நாட்டு சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு பிறந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க மண்டலத்திற்க்கான 4.4 தனிநபர் சாம்பியன்பட்டப் போட்டியை இவர் வென்றார் இதன் விளைவாக பாகோகனுக்கு பிடே மாசுட்டர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் மேற்கண்ட இப்போட்டியை இரண்டாம் முறையாக வென்று சியார்சியா நாட்டின் பத்தூமி நகரில் நடைபெற்ற பிடே உலகக்கோப்பை போட்டியில் விளையாட பாலோகன் தகுதி பெற்றார். இவ்வெற்றிக்காக இவருக்கு அனைத்துலக சதுரங்க மாசுட்டர் என்ற பட்டம் வழங்கப்பட்டது [1]. உலகக் கோப்பைப் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் மாக்னசு கார்ல்சன் என்ற உலக சாம்பியனிடம் பாலோகன் தோற்றார். இதன் மூலம் நடப்பு உலக சாம்பியனான திகழும் மாக்னசு கார்ல்சன் என்ற வீர்ருடன் விளையாடும் முதல் ஆப்பிரிக்க வீர்ர் என்ற பெருமையை பாலோகன் அடைந்தார் [2]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலுவாபெமி_பாலோகன்&oldid=2959704" இருந்து மீள்விக்கப்பட்டது