ஒலி வணிகக்குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலி வணிகக்குறியீடு என்பது, ஒரு வணிக உற்பத்திப் பொருளை அல்லது சேவையை அடையாளப்படுத்துவதற்காக ஒலியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு வகை வணிகக் குறியீடு ஆகும். முன்னர் வணிகக் குறியீடுகளுக்கு ஒலியைப் பயன்படுத்தும் வழக்கம் மிகவும் குறைவு. அண்மைக் காலங்களில் ஒலியும் வணிகக் குறியீடுகளில் பயன்படுவது அதிகரித்து வருகிறது. ஒலி ஒரு வணிகக் குறியீட்டின் கூறாகக் கருதப்படாமல் இருந்ததால், முன்னர் ஒலியை வணிகக் குறியீடாகப் பதிவு செய்து காப்புரிமை பெறுவது கடினமானதாக இருந்தது. இவ்விடயம், உலக வணிக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தில்[1] கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தம் வணிகக் குறியீடு என்பதை ஒரு பொருளையோ சேவையையோ இன்னொன்றிலிருந்து வேறுபடுத்தும் வல்லமை கொண்ட ஏதாவது ஒரு குறியீடு என வரையறுத்தது. இதன் மூலம் ஒலியையும் வணிகக் குறியீடாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் வெவ்வேறு நாடுகள் இது தொடர்பில் வெவ்வேறு விதமான நடைமுறைகளைக் கையாண்டு வருகின்றன.

குறிப்புக்கள்[தொகு]

  1. அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான ஒப்பந்தம் என்பது ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். இது பெரும்பாலான அறிவுசார் சொத்து வகைகள் தொடர்பில் அவற்றின் பாதுகாப்புக்கும் நெறிப்படுத்தலுக்குமான ஆகக்குறைந்த தரங்களை உலக வணிக அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்துகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலி_வணிகக்குறியீடு&oldid=3237324" இலிருந்து மீள்விக்கப்பட்டது