ஒலிவியா ஷேக்ஸ்பியர்

ஒலிவியா ஷேக்ஸ்பியர் (Olivia Shakespear) 1863ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி பிறந்தவர். இவர் பிரித்தானியாவின் சிறந்த நாவலாசியராகவும் நாடக ஆசிரியராகவும் சிறந்த புரவலாரகவும் புகழ் பெற்று விளங்கியவராவார். இவர் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதி வெளியிட்ட புத்தகங்களில் மேரேஜ் பிராப்லம் (marriage problem) குறித்து வெளியிட்ட புத்தகங்கள் பிரபலமானவை.[1]
ஒலிவியா ஒரு ஓய்வுபெற்ற உதவி இராணுவ படைத்தளபதியின் மகளாவார், இவருக்கு முறையான கல்வி குறைவாகவே இருந்தது. எனினும், இவர் நன்கு படித்தவராகவும், இலக்கியத்தின் மீது ஈர்ப்பு கொண்டவராகவும் இருந்தார். 1885-ஆம் ஆண்டில் இவர் இலண்டன் வழக்கறிஞரான ஹென்றி ஹோப் ஷேக்ஸ்பியரை திருமணம் செய்து, 1886-ல் அவர்களின் ஒரே குழந்தையான டொரத்தியை பெற்றெடுத்தார். 1894-ல் அவரது இலக்கிய ஆர்வம் வில்லியம் பட்லர் யேட்ஸுடன் நட்பை ஏற்படுத்தியது, இது 1896-ல் காதல் உறவாக மாறியது.[2] ஆனால் அந்த காதல் உறவு 1897-ல் முடிவுக்கு வந்தது. எனினும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருந்து அடிக்கடி கடிதங்கள் எழுதிக்கொண்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harwood, John (2004-09-23). "Shakespear [née Tucker], Olivia (1863–1938), novelist". Oxford Dictionary of National Biography. Oxford University Press. Retrieved 2025-04-05.
- ↑ qtd. in Carpenter (1988), p. 104