ஒலிம்பிக் சிற்றூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1936இல் கட்டப்பட்ட பெர்லின் ஒலிம்பிக் சிற்றூர்
எல்சிங்கி ஒலிம்பிக் சிற்றூர்,1952.
2002இல் கட்டப்பட்ட சால்ட் லேக் ஒலிம்பிக் சிற்றூர் தற்போது மாணாக்கர் விடுதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒலிம்பிக் சிற்றூர் அல்லது ஒலிம்பிக் கிராமம் (Olympic Village) என்பது ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போது, வழக்கமாக ஒலிம்பிக் பூங்காவிற்குள்ளோ அல்லது நடத்தும் நகரத்தின் வேறெந்தப் பகுதியிலோ கட்டப்படும் குடியிருப்பு வசதியாகும். பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் அலுவலர்களும் போட்டியாளர்களின் பயிற்றுநர்களும் தங்கியிருக்க ஒலிம்பிக் சிற்றூர் கட்டமைக்கப்படுகின்றது. 1972 ஒலிம்பிக்கில் நடந்த மியூனிக் படுகொலையை அடுத்து இந்தச் சிற்றூர்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டாளர்கள், பயிற்றுநர்கள், அலுவலர்கள் மட்டுமே இங்கு அறைகளில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் குடும்ப உறுப்பினர்களும் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களும், தகுந்த சரிபார்ப்பிற்குப் பிறகு தங்க அனுமதிக்கப் படுகின்றனர். பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களும் தடை செய்யப்படுகின்றனர்.

வரலாறு[தொகு]

பியர் தெ குபர்த்தென் இந்த கருத்துரு உருவாக முதன்மையானவராக இருந்தார். 1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் வரை தேசிய ஒலிம்பிக் குழுக்கள் போட்டி நடக்கும் நகரத்தில் தங்குவிடுதிகளில் தங்கள் போட்டியாளர்களுக்காக வாடகைக்கு அறைகள் எடுத்தனர்; இவை மிகவும் செலவைக் கூட்டின. 1924 கோடை ஒலிம்பிக்கில், எசுடேடு ஒலிம்பிக் டெ கொலொம்பசு அருகே போட்டியாளர்கள் தங்க ஏதுவாக ஒருங்கிணைப்பாளர்கள் சிற்றறைகளைக் கட்டினர். 1932 ஒலிம்பிக்கில் தற்போதைய ஒலிம்பிக் சிற்றூர்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் முதல் ஒலிம்பிக் சிற்றூர் அமைக்கப்பட்டது. போட்டியாளர்கள் தங்குவதற்கான கட்டிடத் தொகுதிகளுடன் பிறர் தங்குவதற்கான கட்டிடத் தொகுதிகளும் அமைந்திருந்தது.

வாழ்முறை[தொகு]

போட்டியாளர்கள் தங்கள் போட்டிகளை முடித்த பின்னர் சிற்றின்ப வாழ்க்கை துய்க்கின்றனர் எனப் பரவலாகக் குறிப்பிடப்படுகின்றது. கூடுதலான மதுவிலும் பால்வினைச் செயல்களிலும் போட்டியாளர்கள் ஈடுபடுகின்றனர்.[1][2][3] சோச்சியில் நடந்த 2014 விளையாட்டுக்களின்போது, தங்கியிருந்த 6,000 போட்டியாளர்களுக்கு 100,000 இலவச ஆணுறைகளை பன்னாட்டு ஒலிம்பிக் குழு வழங்கியது; 2012 இலண்டன் ஒலிம்பிக்கின்போது 150,000 ஆணுறைகள் வழங்கப்பட்டன.[4] சிட்னியில் ஏற்பாடு செய்திருந்த 70,000 ஆணுறைகள் பற்றாமல் மேலும் 20,000 வாங்க வேண்டியதாயிற்று.[5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Alipour, Sam (July 23, 2012). "Athletes spill details on dirty secrets in the Olympic Village - ESPN The Magazine - ESPN". ESPN The Magazine. பார்க்கப்பட்ட நாள் 11 February 2014.
  2. Wyatt, Ben; Palmeri, Tancredi (August 12, 2012). "Sex, Games and Olympic Village life - CNN.com". CNN. பார்க்கப்பட்ட நாள் 11 February 2014.
  3. Harris, Rob (July 18, 2012). "Olympic Village Sex: It's Party Time For Athletes At London Olympics". The Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 11 February 2014.
  4. "Over prepared? IOC to hand out 100K condoms". FOX Sports on MSN. பார்க்கப்பட்ட நாள் 11 February 2014.
  5. Celizic, Mike (February 18, 2010). "Cold days, hot nights: Olympic Village secrets". Today in Vancouver. பார்க்கப்பட்ட நாள் 11 February 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பிக்_சிற்றூர்&oldid=2192281" இலிருந்து மீள்விக்கப்பட்டது