ஒலிம்பிக் உறுதிமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலிம்பிக் உறுதிமொழி (Olympic Oath) ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்கவிழாவின்போது பங்கேற்கும் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியாளர் சார்பாக ஒரு விளையாட்டாளரும், பணியாற்றும் ஒவ்வொரு நடுவர் மற்றும் போட்டி அலுவலர் சார்பாக ஒரு நடுவரும் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி ஆகும். போட்டியை நடத்துகின்ற நாட்டின் அணியிலிருந்து ஓர் விளையாட்டாளர் ஒலிம்பிக் கொடியின் ஓர் முனையைப் பிடித்துக்கொண்டு பின்வரும் உறுதிமொழியை எடுக்கிறார் :

இந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் அந்தந்த விளையாட்டுக்களின் விதிகளை மதித்தும் கடைபிடித்தும், எவ்வித ஊக்கமருந்து அல்லது பிற மருந்துகள் இல்லாது அந்த விளையாட்டுக்களை விளையாட பொறுப்பேற்றும், நேர்மையான விளையாட்டு மனப்பாங்குடன் விளையாட்டின் சிறப்புக்காகவும் எங்கள் அணிகளின் பெருமைக்காகவும் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று அனைத்து போட்டியாளர்களின் சார்பாக நான் உறுதியளிக்கிறேன்.[1]

போட்டிகளை நடத்தும் நாட்டிலிருந்து ஓர் நடுவர் அதேபோல ஒலிம்பிக் கொடியின் முனையைப் பற்றிக்கொண்டு பின்வரும் உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறார்:

இந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் நேர்மையான விளையாட்டு மனப்பாங்குடன் அந்தந்த விளையாட்டுக்களின் விதிமுறைகளை மதித்தும் கடைபிடித்தும் முழுமையான நடுநிலையோடு நாங்கள் பணியாற்றுவோம் என்று அனைத்து நடுவர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பாக நான் உறுதியளிக்கிறேன்.[1]

2010 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக்கிலிருந்து, கூடுதலாக போட்டி நடத்தும் நாட்டிலிருந்து பயிற்றுனர் ஒருவரும் அனைத்துப் பயிற்றுனர்கள் சார்பாக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்:

ஒலிம்பிக் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கேற்ப நேர்மையான விளையாட்டு மனப்பாங்கு மற்றும் சமநிலை உணர்வுகளோடு விளையாடவும் கடைபிடிக்கவும் பொறுப்பேற்றுக் கொண்டு அனைத்து பயிற்றுனர்கள் மற்றும் போட்டியாளர்களுடன் வந்துள்ள பிற உறுப்பினர்கள் சார்பாக நான் உறுதியளிக்கிறேன்[2]

பெய்ஜிங்கில் நடந்த 2008 ஒலிம்பிக்கில் சீனத்திலும் துரினில் நடந்த 2006 குளிர்கால ஒலிம்பிக்கில் இத்தாலியத்திலும் உறுதிமொழி எடுக்கப்பட்டன.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பிக்_உறுதிமொழி&oldid=3536411" இருந்து மீள்விக்கப்பட்டது