ஒரு மணிப்பூ
Flower-of-an-hour | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Hibiscus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/HibiscusH. trionum |
இருசொற் பெயரீடு | |
Hibiscus trionum L. | |
வேறு பெயர்கள் [1] | |
|
ஒரு மணிப்பூ ஒரு பருவச் செடி பூ ஆகும், இரண்டு அடி உயரம் மட்டுமே வளரக்கூடியது இதில் பூ தனித்தனியாக வருகிறது.
செடியின் அமைவு[தொகு]
இது ஒரு பருவச் செடி ஆகும். இரண்டு அடி உயரம் மட்டுமே வளரக்கூடியது. இதில் பூ தனித்தனியாக வருகிறது. இதனுடைய பூ மிக அழகாக இருக்கும். இதன் பூ வெளுத்த மஞ்சள் நிறத்திலோ, சில சமயம் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இப்பூவின் மையப்பகுதியில் மினுமினுக்கும் இளம் ஊதா சிவப்பு நிறம் உள்ளது. இதனால் இப்பூ மிகவும் அழகாக உள்ளது. இப்பூ 7 செ.மீ. விட்டம் உடையது. இப்பூ சூரியனின் பிரகாசமான ஒளிபடும் போது நன்றாக மலர்கிறது. பூவின் மீது நிழல் பட்ட உடனே வாடிவிடுகிறது.
இச்செடி தென் ஆப்பிரிக்காவில் வளர்கிறது. இதை பாறைகள் நிறைந்த பகுதியில் நடுகிறார்கள். இச்செடி செம்பருத்தி சாதியைச் சார்ந்தது. இந்த செம்பருத்தி சாதியில் 70 வகைச் செடிகள் உள்ளன.
வெளி இணைப்புகள்[தொகு]
- missouriplants.com: Hibiscus trionum பரணிடப்பட்டது 2019-07-18 at the வந்தவழி இயந்திரம்