ஒருங்கொளி ஒத்திசைவு நீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளியியல் இயற்பியலில், ஒருங்கொளி ஒத்திசைவு நீக்கம் (laser detuning) என்பது ஒரு குவைய அமைப்பில் ஒருங்கொளி அதிர்வெண்ணை ஒத்திசைவு அதிர்வெண்ணில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கும் அதிர்வெண்ணிற்கு முடுக்கி/ஒடுக்கி விடுவதாகும். நிகழ்வாக அல்லாமல் அளவாகக் கருதும்போது ஒருங்கொளி ஒத்திசைவு நீக்கம் என்பது குவைய அமைப்பின் ஒத்திசைவு அதிர்வெண்ணிற்கும் ஒருங்கொளியின் ஒளியியல் அதிர்வெண்ணிற்கும் (அல்லது அலைநீளம்) இடையிலான அதிர்வெண் வேறுபாடாகும். மேலும், சீரொளிக் கருவிகள் ஒத்திசைவு அதிர்வெண்ணிற்குக் கீழ் ஒளியன்களை ஒடுக்கி விடும்போது அதனை "சிவப்பு-இசைவாக்கம்" (red-detuned) என்றும், ஒளியன்களை அதிர்வெண்ணிற்கு மேல் முடுக்கி விடும்போது அதனை "நீல-இசைவாக்கம்" (blue-detuned) என்றும் அழைக்கிறோம்.[1][2]

விளக்கம்[தொகு]

மின்காந்த நிறமாலையின் ஒளியியல் அதிர்வெண் வரம்பில் (அதாவது சில THz முதல் சில PHz வரையிலான அதிர்வெண் அல்லது அதற்கு சமமான அலைநீளம் 10 nm முதல் 100 μm வரை) ஒத்திசைவு அதிர்வெண் ஐக் கொண்ட அமைப்பைக் கவனிப்போம். இந்த மதிப்புக்கு நெருக்கமான அதிர்வெண் கொண்ட ஒருங்கொளி மூலம் இந்த அமைப்பு முடுக்கி விடப்படும்போது, ஒருங்கொளி ஒத்திசைவு நீக்கம் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

ஒளியியல் அதிர்வெண் வரம்பில் இத்தகைய ஒத்திசைவு அமைப்புகளின் மிகவும் பொதுவான எடுத்துக்காட்டுகள் ஒளியியல் குழிவுகள்,[3][4] அணுக்கள் மற்றும் மின்கடத்தா அல்லது குறைகடத்திகள் ஆகியவையாகும்.

பயன்பாடுகள்[தொகு]

அணுக்களின் ஒருங்கொளி குளிர்வு[தொகு]

ஓர் இயங்கமைப்பில் ஆய்வக சட்டக நிலையில் ஒருங்கொளிகள் ஒத்திசைவு அலைவெண்ணில் இருந்து டாப்பிளர் பெயர்ச்சியுறும்படி ஒத்திசைவு நீக்கம் செய்யும்போது, அவை குறிப்பிட்ட வேகத்திலும் குறிப்பிட்ட திசையிலும் இயங்கும் அணுக்களை மட்டுமே கட்டுபடுத்தி ஒருங்கொளி குளிர்வை உருவாக்கி, [5] காந்த ஒளியியலாகச் சிறைப்படுத்துகின்றன.[2]

ஒளியியக்கவியல்[தொகு]

ஓர் ஒளியியக்கவியல் அமைப்பில் ஓர் எந்திரவியல் அலைவாக்கியை ஒளியியலாகத் தூண்டிய ஒடுக்குதலின் வரைவு.

ஒருங்கொளியால் அணுக்களைக் குளிர்விப்பது போலவே, ஒத்திசை நீக்கத்தின் குறி, ஒளியியக்கவியல் பயன்பாடுகளில் முதன்மைப் பாத்திரம் வகிக்கிறது. [6][7] செம்பெயர்ச்சி ஒத்திசைவு நீக்கக் களத்தில், ஒளியியக்கவியல் அமைப்பு குளிர்ந்து ஒருங்கியல் ஆற்றல் ஒளியில் இருந்து எந்திரவியல் முறைமைக்கு பரிமாற்றப்படுகிறது. நீலப்பெயர்ச்சி ஒத்திசைவு நீக்கக் களத்தில், ஒளியியக்கவியல் அமைப்பு சூடாகி, எந்திரவியல் மிகைப்பும் ஒருங்கியல்நிலை நெரிப்பும் குவையத் தொலைவிணக்கமும் ஏற்படுகின்றன. ஒத்திசைவுள்ள நேர்வில், ஒத்திசைவு நீக்கம் சுழியானால், எந்திர இயக்கத்தை உயர் உணர்திறத்துடன், லிகோ(LIGO)வில் நிகழ்வது போல கண்டறியலாம் .


மேற்கோள்கள்[தொகு]

  1. Harold J. Metcalf : Petervan der straten (1999) Laser cooling and trapping, Sprinfer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-98728-6 Retrived 26 November 2011
  2. 2.0 2.1 Fritz Riehle (8 May 2006). Frequency Standards: Basics and Applications. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-527-60595-8. https://books.google.com/books?id=q9AKk3smIJwC. பார்த்த நாள்: 26 November 2011. 
  3. Aspelmeyer, M.; Gröblacher, S.; Hammerer, K.; Kiesel, N. (2010-06-01). "Quantum optomechanics—throwing a glance [Invited]" (in EN). JOSA B 27 (6): A189–A197. doi:10.1364/JOSAB.27.00A189. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-8540. Bibcode: 2010JOSAB..27..189A. 
  4. Aspelmeyer, Markus; Kippenberg, Tobias J.; Marquardt, Florian (2014-12-30). "Cavity optomechanics". Reviews of Modern Physics 86 (4): 1391–1452. doi:10.1103/RevModPhys.86.1391. Bibcode: 2014RvMP...86.1391A. 
  5. Harold J. Metcalf; Peter Van der Straten (1999). Laser cooling and trapping. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-98728-6. https://books.google.com/books?id=i-40VaXqrj0C. பார்த்த நாள்: 26 November 2011. 
  6. Aspelmeyer, M.; Gröblacher, S.; Hammerer, K.; Kiesel, N. (2010-06-01). "Quantum optomechanics—throwing a glance [Invited]" (in EN). JOSA B 27 (6): A189–A197. doi:10.1364/JOSAB.27.00A189. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-8540. Bibcode: 2010JOSAB..27..189A. 
  7. Aspelmeyer, Markus; Kippenberg, Tobias J.; Marquardt, Florian (2014-12-30). "Cavity optomechanics". Reviews of Modern Physics 86 (4): 1391–1452. doi:10.1103/RevModPhys.86.1391. Bibcode: 2014RvMP...86.1391A.