உள்ளடக்கத்துக்குச் செல்

ஒருங்கிணைந்த சவ்வுப்புரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
E=உயிரணு புறவெளி; P=முதலுருமென்சவ்வு; I=உயிரணு அகவெளி

ஒருங்கிணைந்த சவ்வுப் புரதம் (integral membrane protein; IMP) என்பது உயிரியச்சவ்வுடன் நிரந்தரமாகப் இணைக்கப்பட்ட புரத மூலக்கூறுகளையோ அல்லது புரதங்களின் தொகுப்பையோ குறிக்கும். சவ்வின் குறுக்கிலுள்ளப் புரதங்கள் வளைய கொழுமியங்களால் (சவ்வுப் புரதங்களுடன் நேரடியாகத் தொடர்பு உள்ள கொழுமியங்கள்) சூழப்பட்டுள்ளன. உயிரியச்சவ்விலிருந்து இத்தகுப் புரதங்களை சோப்பு பொருள்கள் (detergents), மின்முனைவற்ற கரைப்பான்கள் அல்லது சில நேரங்களில் இயல்பு நீக்கிகளைக் (denaturants) கொண்டு மட்டுமேப் பிரிக்க முடியும். உயிரினத்தின் புரதங்களைக் குறியீடு செய்யும் மரபுத்தொகையின் கணிசமான பகுதி இப்புரதங்களுக்கானக் குறியீடுகளைக் கொண்டுள்ளன[1]. அனைத்து மாறுபக்கச்சவ்வுப் புரதங்களும் (transmembrane proteins) ஒருங்கிணைந்தச் சவ்வுப் புரதங்களாகும். ஆனால், ஒருங்கிணைந்த சவ்வுப் புரதங்கள் அனைத்தும் மாறுபக்கச்சவ்வுப் புரதங்கள் இல்லை[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wallin E, von Heijne G (1998). "Genome-wide analysis of integral membrane proteins from eubacterial, archaean, and eukaryotic organisms". Protein Science 7 (4): 1029–38. doi:10.1002/pro.5560070420. பப்மெட்:9568909. 
  2. Steven R. Goodman (2008). Medical cell biology. Academic Press. pp. 37–. ISBN 978-0-12-370458-0. Retrieved 24 November 2010.