ஒராயன் (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒராயன்
Orion
Orion lunar orbit (Sept 2006).jpg
விபரம்
பங்கு: அவிநி, அதற்கு அப்பால்
பணிக்குழு: 4 (முன்னர் 6 பேருக்கு திட்டமிடப்பட்டது)
தாங்கு கலன்: ஏரிசு I
வெள்ளோட்டம்: 2015
பரிமாணங்கள்
உயரம்:
விட்டம்:
Pressurized Volume:
விண்கலத் திணிவு: 25,000 கிகி (55,116 lb)[1]
விண்குமிழ் திணிவு: 9,525 கிகி (21,000 lb)[2]
Launch Payload:
Return Payload:
Performance
நீடிக்கும் காலம்: 210 நாட்கள்
ஒராயனின் சின்னம்

ஒராயன் அல்லது ஒராயன் பல்நோக்கு குழு வாகனம் (Orion) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவுக்காக லாக்கிது மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, மற்றும் புவியின் கடல் மட்டத்திலிருந்து குறைந்த உயரத்தில் புவியின் வட்டசுற்றுப்பாதையில் சுற்றும் விண்கலம் ஆகும். இவ்விண்கலம் நாசாவின் விண்மீன் குழுத் திட்டத்துக்காக விண்வெளிவீரர்களைக் கொண்டு செல்லுவதற்காகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நாசா(NASA) தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு, ஜரோப்பியா நிறுவனமான Astrium (ESA) உதவியோடு, லாங்ஹிட் மார்டின் X-33 தொழில் நுட்பத்துடன் உருவான பல்நோக்கு வாகனமாகும். இது சந்திரன், மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆராயவும், புவியின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் உதவியாக உள்ளது. இதைக் கையாளும் உரிமை (ISS) அனைத்துலக விண்வெளி மையத்திற்க்கு மட்டுமே உண்டு. மே மாதம் 25, 2011ல் இதன் திட்டம் பற்றி அறிவித்தது. பின்னர் துவங்கிய திட்டத்தில் 5 கைவிடப்பட்டு, மறு ஆய்விற்குப் பிறகு சோதனை முறையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வாகனமானது அமெரிக்காவின் நாசாவும், (NASA) ஜரோப்பாவின் அஸ்ட்ரோமும் (Astrium) சேர்ந்து ஜரோப்பாவின் தளத்தில் வைத்து கட்டுமானம் செய்யப்பட்டது.


ஒவ்வொரு ஒராயன் விண்கலமும் 4 முதல் 6 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கும், பின்னர் செவ்வாயை நோக்கியும் ஏனைய சூரிய மண்டல இடங்களுக்கும் விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்ல இத்திட்டம் பயன்படுத்தப்படவிருக்கிறது[3][4].


குறிக்கோள்[தொகு]

பல்நோக்கு தோகுப்பு வாகனமானது (MPCV) ஒரு காப்பு வாகனமாகச் செயல்படுகிறது.இது சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்க்கு தேவையான உதவிகளைச் செய்யவும்,செவ்வாய் கோள் ஆராய்ச்சிக்காகவும், நிலவிற்க்கான சோதனைக்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.


வரலாறு[தொகு]

2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ந்தேதி அமெரிக்க ஜனதிபதி ஜோர்ஜ். டபிள்யூ. புஜ் அவர்களால் நாட்டிற்க்கு அர்பணிக்கப்பட்டது. இதைத் துடங்கிவைத்துப்பேசும்போது, "நமது விண்வெளி திட்ட அபிவிருத்தியில் இது இரண்டாவது பெரிய திட்டமாகும். இது 2008 துடங்கி 2014க்குள் மனிதர்கள் சென்று ஆராய்ச்சி செய்யும்படி செயல்படுத்தப்படும். சர்வதேச விண்வெளி மையத்திற்க்கு விண்வெளிவீரர்கள் சென்றுவர மிகவும் உதவியாக இருக்கும். இது ஒரு அப்போலோவின் கட்டுப்பட்டு தொகுதியாகும். நமது விண்கலம் கொலம்பியா விபத்துக்குள்ளானதால் பல்நோக்கு வாகனமானது வெள்ளை மாளிகையின் அறிவுரையின்படியும், கோலம்பியா விபத்து புலணாய்வுக்குழு (Columbia Accident Investigation Board) அறிக்கையின் படியும் மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது 1972ல் தயாரான அப்போலோ - 16க்குப்பதிலாக ஓரியான் உறுவாக்கப்பட்டுள்ளது. தேவையானால் மேலும் பொருளாதார அடிப்படையில் மூன்று நிலைகளில் மெருகேற்றப்படும். இதன் பின்னர் லியோ(Leo) திட்டமும் கொண்டுவரப்படும்.

நிலை[தொகு]

அனைத்துலக் விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகள் முடிவடையும் தருவாயைக் கணக்கில்கொண்டு (6 அல்லது 7 வாகனங்கள் வரை) பல் தொகுப்பு வாகனங்களை உறுவாக்குவது(cev) என முடியு செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

<http://www.space.com> <http://www.orionsat.com> <http://www.space.skyrocket.de>


வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒராயன்_(விண்கலம்)&oldid=1504802" இருந்து மீள்விக்கப்பட்டது