உள்ளடக்கத்துக்குச் செல்

ஒடிசா மாநில அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 20°15′22″N 85°50′29″E / 20.2562°N 85.8415°E / 20.2562; 85.8415
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒடிசா மாநில அருங்காட்சியகம்
Odisha State Museum
ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ ସଂଗ୍ରହାଳୟ
அருங்காட்சியக நுழைவாயில்
Map
நிறுவப்பட்டது1932
அமைவிடம்புவனேசுவரம், இந்தியா
ஆள்கூற்று20°15′22″N 85°50′29″E / 20.2562°N 85.8415°E / 20.2562; 85.8415
இயக்குனர்மஞ்சுசிறீ சமந்தராய்
உரிமையாளர்ஒடிசா அரசு
வலைத்தளம்odishamuseum.nic.in

ஒடிசா மாநில அருங்காட்சியகம் (Odisha State Museum) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகரமான புவனேசுவரத்தில் அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தின் அசல் வடிவம் 1932 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பின்னர் 1960 ஆம் ஆண்டு தற்போதைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. [1] தொல்பொருளியல், கல்வெட்டியல், நாணயவியல், படைக்கலங்கள், சுரங்கத் தொழில் & நிலவியல், இயற்கை வரலாறு, கலை மற்றும் கைவினை, தற்கால கலை, பாரம்பரிய பட்டா ஓவியம், மானிடவியல் மற்றும் பனை ஓலை சுவடிகள் என அருங்காட்சியகம் பதினொரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது . [1] மேற்பார்வையாளர் ஒருவர் தலைமையில் அருங்காட்சியகத்தின் நிர்வாக கட்டுப்பாடு ஒடிசா அரசாங்கத்தின் கலாச்சார விவகாரத் துறையின் கைகளில் உள்ளது.

வரலாறு

[தொகு]

இந்த அருங்காட்சியகத்தின் தோற்றம் 1932 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. வில்லியம் இயோன்சு, ஞானசியாம் தாசு, என்சி பானர்சி , அரேகிருட்டிணா மகதாப் போன்ற சில வரலாற்றாசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கட்டாக்கின் ராவென்சா கல்லூரியில் ஒரு அருங்காட்சியகத்தை நிறுவினர். 1945-46 ஆம் ஆண்டில் அருங்காட்சியகம் பழைய புவனேசுவரில் உள்ள பிரம்மானந்தா கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஒடிசா அரசாங்கத்தால் மாநில அருங்காட்சியகத்தின் தகுதிநிலையும் அதற்கு வழங்கப்பட்டது. [1] பின்னர், அருங்காட்சியகம் 1950 ஆம் ஆண்டில் பட்டேல் அரங்கிற்கும் மீண்டும் புவனேசுவரில் உள்ள அலகு-1 என்ற மற்றொரு கட்டிடத்திற்கும் மாற்றப்பட்டது. 1957 ஆம் ஆண்டில், அப்போதைய குடியரசுத் தலைவர் ராசேந்திர பிரசாத் அவர்களால் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது, இறுதியாக தற்போதைய கட்டிடத்தில் உள்ள அருங்காட்சியகம் 1960 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. [1]

காட்சியகங்கள்

[தொகு]
தொல்பொருள் பிரிவில் புத்தர் சிலை
  • தொல்லியல்
  • சமகால கலை
  • கல்வெட்டு
  • நாணயவியல்
  • ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்
  • கலை மற்றும் கைவினை
  • சுரங்க மற்றும் புவியியல்
  • மானுடவியல்
  • சமசுகிருத கையெழுத்துப் பிரதி
  • பட்டா ஓவியம்

நேரங்கள்

[தொகு]

திறக்கும் நேரம் திங்கள் தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

புகைப்படம் எடுத்தல்

[தொகு]

அருங்காட்சியகத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்காக அனுமதிச் சீட்டு எடுக்கும்போது முன் அனுமதி பெற வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Patel, C.B.. "Origin and evolution of Orissa State Museum". OHRJ XLVII (3). http://orissa.gov.in/e-magazine/Journal/journalvol3/pdf/origin%26evolution.pdf. பார்த்த நாள்: 11 March 2013. Patel, C.B. "Origin and evolution of Orissa State Museum" (PDF). OHRJ. XLVII (3). Retrieved 11 March 2013.

புற இணைப்புகள்

[தொகு]