ஒக்மொக் மலை
ஒக்மொக் மலை | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 1,073 m (3,520 அடி) ![]() |
ஒக்மொக் மலை (Mount Okmok) என்பது அலாஸ்காவின் அலூசியன் தீவுகளின் வடகிழக்கில் அமைந்துள்ள ஒக்மொக் கால்டெரா ஓரத்தில் அமைந்துள்ள மலை ஆகும்.
ஜூலை 2008 வெடிப்பு[தொகு]
சனிக்கிழமை, ஜூலை 12, 2008 இல், ஒக்மொக் மலை எச்சரிக்கை எதுமின்றி வெடித்தது. 33,000 அடி (10,058.4 மீ) உயரத்துக்கு இதன் புகை மண்டலம் வெளிக் கிளம்பியது. ஆனாலும், எரிமலைக் குழம்புகளின் தரவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஒக்மொக் மலை அலாஸ்காவின் டச்சு துறைமுக விமான நிலையத்தில் இருந்து 60 மைல் தூரத்தில் அமைந்திருப்பதால் இந்த எரிமலைக் குமுறல் கடுமையாகப் பரிசீலிக்கப்படுகிறது[1].
இந்த எரிமலை கடைசியாக 1997 இல் வெடித்து லாவாக்கள் வெளிப்பட்டன. இம்முறை ஆரம்ப எச்சரிக்கை எதுவும் தரவில்லை. இம்மலைக்கு அருகே கிளென் கோட்டைப் பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் அனைவரும் எரிகற்கள், தூசி போன்றவற்றுக்கு அஞ்சி வெளியேறினர்[2].

மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Alaska volcano erupts; island residents evacuated". Reuters. July 13, 2008. http://www.reuters.com/article/topNews/idUSN1238277220080713?feedType=RSS&feedName=topNews. பார்த்த நாள்: 2008-07-13.
- ↑ D'ORO, RACHEL (2008-07-12). "Remote Alaska volcano erupts, spewing rock and ash". AP via Google. Archived from the original on 2008-07-31. https://web.archive.org/web/20080731112547/http://ap.google.com/article/ALeqM5hcWJaxwgurm_TV9AVcObQBWbS25QD91SPA8G0. பார்த்த நாள்: 2008-07-13.