அலூசியன் தீவுகள்
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பசிபிக் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | >300 |
முக்கிய தீவுகள் | உனலாஸ்கா தீவு |
பரப்பளவு | 6,821[1] sq mi (17,670 km2) |
நீளம் | 1,200 mi (1,900 km) |
நிர்வாகம் | |
ஐக்கிய அமெரிக்கா | |
மாநிலம் | அலாஸ்கா |
பெரிய குடியிருப்பு | உனலாஸ்கா (மக். 4,283) |
மக்கள் | |
மக்கள்தொகை | 8,162 (2000) |
இனக்குழுக்கள் | அலூட் |
அலூசியன் தீவுகள் (Aleutian Islands) என்பவை வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள முன்னூறிற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இவற்றின் மொத்தப் பரப்பளவு 6,821 சதுர மைல் (17,666 கிமீ²). அலாஸ்கா குடாவில் இருந்து மேற்கே 1,200 மைல் (1,900 கிமீ) வரை பரந்துள்ளது. இத்தீவுக் கூட்டத்தின் பெரும் பகுதி அலாஸ்காவில் இருந்தாலும், மேற்குப் பக்கத்தின் கடைசிப் பகுதியில் ஒரு சிறிய கொமண்டாஸ்கி தீவுகள் ரஷ்யாவில் உள்ளது. மொத்தம் 57 எரிமலைகள் இத்தீவுக் கூட்டத்தில் உள்ளன. 1867ம் ஆண்டுக்கு முன்னர் இவை கத்தரீன் தீவுக்கூட்டம் என்றழைக்கப்பட்டன.
மக்கள்
[தொகு]இத்தீவுகளில் உள்ள பழங்குடியினர் தம்மை உனாங்கன் என அழைக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் "அலூட்" என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழி அலூட் மொழி ஆகும். இம்மொழி எஸ்கிமோ-அலூட் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழிக் குடும்பம் வேறு எந்த மொழியுடனும் தொடர்புடையதல்ல.
2000 இல் இத்தீவுகளின் மொத்த மக்கள் தொகை 8,162 ஆகும். இவர்களில் 4,283 பேர் உனலாசுக்கா தீவில் வாழ்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Editors of Encyclopædia Britannica (18 December 2015). "Aleutian Islands". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
{{cite web}}
:|author=
has generic name (help)