ஐ.என்.எசு. கருடாவில் சேடக்கு உலங்கு வானூர்தி விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ.என்.எசு. கருடாவில் சேடக்கு உலங்கு வானூர்தி விபத்து
Chetak Helicopter Crash at INS Garuda
விபத்து சுருக்கம்
நாள்நவம்பர் 4, 2023
சுருக்கம்பராமரிப்பு வாகன சோதனையின் போது தரை விபத்து
இடம்ஐ.என்.எசு கருடா, கொச்சி, இந்தியா
உயிரிழப்புகள்1 தரைப் படை உறுப்பினர்
வானூர்தி வகைசேடக்கு உலங்கு வானூர்தி
இயக்கம்இந்தியக் கடற்படை

ஐ.என்.எசு. கருடாவில் சேடக்கு உலங்கு வானூர்தி விபத்து (Chetak Helicopter Crash at INS Garuda) இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை விமான நிலையமான ஐஎன்எசு கருடாவின் ஓடுபாதையில் சேடக்கு உலங்கு வானூர்தி 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று விபத்துக்குள்ளானது. விபத்தில் தரைப்படை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததாக கடற்படை செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.[1][2][3]

விபத்து[தொகு]

கொச்சியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் உள்ள ஐஎன்எசு கருடா ஓடுபாதையில் இந்த விபத்து நடந்துள்ளது. கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாகவும் ஓடுபாதையில் இருந்த கடற்படை அதிகாரி உலங்கு வானூர்தியில் இறக்கையில் அடிபட்டு இறந்தார் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் உலங்கு வானூர்தியின் ஓட்டுநர் உட்பட இருவர் காயம் அடைந்ததாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 2.30 மணியளவில் வழக்கமான பயிற்சியின் போது சேடக்கு உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.[4]

நடவடிக்கை[தொகு]

இந்திய கடற்படை உடனடியாக ஓர் அறிக்கையை வெளியிட்டு, உயிரிழப்புக்கு இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்தது. இந்தியக் கடற்படைத் தலைவர் ஆர் அரி குமார் மற்றும் அனைத்து கடற்படை வீரர்களும் யோகேந்திர சிங் என அடையாளம் காணப்பட்ட தரைப்படை குழு உறுப்பினரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணத்தை விசாரிக்க விசாரணை குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Navy helicopter crashes at INS Garuda runway in Kochi, 1 killed". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-05.
  2. "Chetak helicopter crashes at naval air station in Kochi, 1 dead | India News - The Indian Express". web.archive.org. 2023-11-05. பார்க்கப்பட்ட நாள் 2023-11-05.
  3. "Naval sailor killed in Chetak helicopter accident in Kochi | Kochi News - Times of India". web.archive.org. 2023-11-05. பார்க்கப்பட்ட நாள் 2023-11-05.
  4. "அதிர்ச்சி... கேரளாவில் ஹெலிகாப்டர் விபத்து; இந்திய கடற்படை அதிகாரி மரணம்!". இந்து, காமதேனு. https://kamadenu.hindutamil.in/national/indian-navy-helicopter-crash-in-kerala. பார்த்த நாள்: 5 November 2023.