ஐரோப்பிய தமிழ் இலக்கியச் சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலப்பெயர் தமிழ் படைப்பளிகளினால் ஐரோப்பாவில் கூட்டப்படும் ஒரு இலக்கிய நிகழ்வே இலக்கியச் சந்திப்பு ஆகும். மனித உரிமைகள், பெண்கள், தலித்துக்கள், மலையக மக்கள், முஸ்லீம்கள் உரிமைகள் போன்ற ஈழத்தமிழ் தேசிய மைய கதையாடலில் புறக்கணிக்கப்பட்ட கருப்பொருட்களை மையமாக இந்த சந்திப்புக்களில் அலசப்படுவது இந்த சந்திப்பின் சிறப்பு ஆகும். இச்சந்திப்பு 1988ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. இச்சந்திப்பு தமிழர்களின் முக்கிய பிரச்சினையான சிங்கள-தமிழ் இனப்பிரச்சினையை அலட்சியப்படுத்தி, அதன் முக்கிய பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்குவாதக விமர்சனங்கள் உண்டு.

வெளி இணைப்புகள்[தொகு]