ஐயப்பித்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயப்பித்து அல்லது ஐயப்பிரமை (Paranoia) என்பது மிகையான ஐயம் அச்சம் ஆகியவற்றின் அடிப்படையில் வேண்டாத காரணங்களைக் கற்பித்துக்கொள்கை. தற்செயலான அல்லது சாதாரணமான அல்லது நிகழாத நிகழ்வுகளுக்கெல்லாம் மிகையான ஐயங்களால் வேண்டாத காரணங்களைக் கற்பித்துக் கொள்வர். இல்லாதவையெல்லாம் இவர்களுக்கு இருப்பதுபோல் (delusional belief) தோன்றும்.

பொதுவான மனநல பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறிய இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று அவர்களாகவே தனது பிரச்சனைகளை தெரிவிப்பதின் செய்திகளைக் கொண்டு அறிவது; மற்றது அவரது நெருங்கிய நபர் தரும் செய்திகளைக் கொண்டு அறிவது. ஐயப்பித்தைப் பெரும்பாலான சமயங்களில் நெருங்கிய நபர் தரும் செய்திகள் மூலமாகவே கண்டுபிடிக்க முடிகிறது. மருத்துவமனையில் நேரடிக் கண்காணிப்பில் இதை மேலும் தெளிவாக உறுதி செய்து கொள்ள முடியும்.

ஐயப்பித்தை அடையாளங்காணப் பல்வேறு வகை அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு வகைபடுத்தபட்டுள்ளன. ஆனாலும் எந்தவொரு தனி அறிகுறியையும் வைத்து இறுதி முடிவு எடுத்துவிட முடியாது. பல சமயங்களில் சில குறைகள் கலாச்சார சூழ்நிலை, கல்வி, வயது போன்ற பலவித வித்தியாசமான வேறுபாடுகளின் காரணமாக கூட இருக்கலாம். எந்தவொரு அறிகுறியும் வேறு வகை மனநல பாதிப்பு அல்லது உடல்நல பாதிப்பின் காரணமாக இருக்கலாம். எனவே ஐயப்பித்து நோய்தான் என்று இறுதியாக உறுதியாக முடிவெடிப்பது சுலபமல்ல.

பாதிக்கபட்டவரது அறிகுறிகளும் மற்ற நெருங்கிய நபரின் கருத்துகளும், மருத்துவரது நேரடி கண்காணிப்பும், காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களும் கணக்கில் எடுத்து கொள்ளபடும். கிட்டதட்ட ஒரு குற்றவாளியின் வழக்கில் நிதானமாக எடுக்கப்படும் தெளிவான தீர்ப்பை போல பல அறிகுறிகளின் தொகுப்பைக் கொண்டு மனசிதைவு நோய் என்று உறுதியாகத் தீர்மானிக்கபடுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக மனநல மருத்துவரின் ஆலோசனைக்கு வருகிறார் என்பதைப் பொறுத்தும், அவர்களுக்கு அளிக்கும் சரியான சிகிச்சை முறைகளை பொறுத்தும் இந்நோய் முழுமையான தீவிரமான கட்டத்தை அடையாமல் நோயால் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயப்பித்து&oldid=2745966" இலிருந்து மீள்விக்கப்பட்டது