உள்ளடக்கத்துக்குச் செல்

ஐயப்பன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயப்பன் கோயில் என்பது இந்துக் கோயிலின் கருவறையில் ஐயப்பன் அம்சமாக விளங்கும் மூலவர் தெய்வம் வீற்றிருக்கும் பட்சத்தில், அக்கோயில் ஐயப்பன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஐயப்பன் கோயிலிலும், ஸ்ரீசக்கரத்தின் மீது சின்முத்திரையுடன் அமர்ந்த கோலத்தில் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு மிகாமல், ஐயப்பன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஐயப்பன் கோயில்களில் தத்துவமஸி என்று ஒரு குறிப்பு காணப்படும். தத்+துவம்+அஸி என்று அறியப்படும் அந்தக் குறிப்பானது, 'நீ எதைத் தேடி வந்தாயோ, அதுவாகவே நீ இருக்கிறாய்' என்று பொருள்படும். அதாவது, ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வீகத் தன்மை நிரம்பியுள்ளது என்பதை உணர வேண்டும் என்பதின் சாராம்சம் அது. மேலும், ஐயப்பன் கோயிலில் 18 படிகள் கொண்ட ஓர் அமைப்பு காணப்படுகிறது. அது கீழ்க்கண்ட தத்துவங்களை உணர்த்துகிறது.

18 படிகளின் தத்துவங்கள்

[தொகு]
  1. பிறப்பு நிலையற்றது
  2. சாங்கிய யோகம்
  3. கர்ம யோகம்
  4. ஞான யோகம்
  5. சன்னியாசி யோகம்
  6. தியான யோகம்
  7. ஞான விஞ்ஞான யோகம்
  8. அட்சர பிரம்ம யோகம்
  9. ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
  10. விபூதி யோகம்
  11. விஸ்வரூப தரிசன யோகம்
  12. பக்தி யோகம்
  13. சேஷத்ர விபாக யோகம்
  14. குணத்ரய விபாக யோகம்
  15. புருஷோத்தம யோகம்
  16. தைவாசுரஸம்பத் விபாக யோகம்
  17. ச்ராத்தாதரய விபாக யோகம்
  18. மோட்ச சன்னியாச யோகம்

கேரளாவிலுள்ள சபரிமலை அய்யப்பன் கோயில், ஆரியங்காவு ஐயப்பன் கோவில், அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயில், குளத்துப்புழை அய்யப்பன் கோவில், எருமேலி தர்மசாஸ்தா கோயில் தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள இராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில், கோயம்புத்தூரின் சித்தாபுதூர் ஐயப்பன் கோயில்,[1] கன்னியாகுமரி மாவட்டத்தின் கோட்டாறு பகுதியிலுள்ள சுவாமி ஐயப்பன் கோயில்,[2] மதுரையிலுள்ள தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள அய்யப்பன் கோயில்[3] ஆகியவை சில முக்கிய ஐயப்பன் கோயில்களாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arulmigu Ayyappasami Temple, New Siddapudur, Coimbatore - 641044, Coimbatore District [TM009771].,(sabarimallai ) Iyappan,Iyappan (sapari malai Iyappan)". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
  2. "Arulmigu Swamy Iyyappan Temple, Kottar, Vadivesswaram - 629002, Kanyakumari District [TM041757].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
  3. "Arulmigu Ayyappan Temple, Thallakulam, Thallakulam - 625002, Madurai District [TM032126].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயப்பன்_கோயில்&oldid=3824132" இலிருந்து மீள்விக்கப்பட்டது