ஐதரோடெர்சிகைட்டு
Appearance
ஐதரோடெர்சிகைட்டு Hydroterskite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | Na2ZrSi6O12(OH)6 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மேற்கோள்கள் | [1][2] |
ஐதரோடெர்சிகைட்டு (Hydroterskite) என்பது Na2ZrSi6O12(OH)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். செஞ்சாய்சதுர பட்டைக்கூம்பு வடிவ கனிமமான டெர்சிகைட்டுடன் தொடர்புடைய ஓர் அரியவகை சிர்க்கோனிய சிலிக்கேட்டு கனிமம் ஐதரோடெர்சிகைட்டு ஆகும். கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்திலுள்ள மாண்டிரியலுக்கு அருகில் இக்கனிமம் கண்டறியப்பட்டது [1]. டெர்சிகைட்டுடன் ஒப்பிடுகையில் ஐதரோடெர்சிகைட்டு சற்று அதிகமாக நீருறிஞ்சக் கூடியதாக உள்ளது [2]. இலிட்வின்சிகைட்டு, கபுசிடினைட்டு போன்ற கனிமங்கள் வேதியியல் முறையில் ஐதரோடெர்சிகைட்டு கனிமத்தை ஒத்த பிற கனிமங்களாகும் [3][4].
பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஐதரோடெர்சிகைட்டு கனிமத்தை Hter[5]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Grice, J.D., Rowe, R., and Poirier, G., 2015. Hydroterskite, IMA 2015-042. (2015) Hydroterskite, IMA 2015-042. CNMNC Newsletter No. 27, October 2015, 1224; Mineralogical Magazine 79, 1229-1236
- ↑ 2.0 2.1 "Terskite: Terskite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
- ↑ "Litvinskite: Litvinskite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
- ↑ "Kapustinite: Kapustinite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.