ஐதரசன் வழங்கு கரைப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐதரசன் வழங்கு கரைப்பான் (Hydrogen-donor solvent) என்பது நிலக்கரி போன்ற ஐதரசன் குறைவு அடிமூலக்கூறுகளுக்கு ஐதரசனை கொடையளிக்கும் ஒரு நீரகக்கரிமத்தைக் குறிக்கிறது. ஐதரசன் குறைவு அடிமூலக்கூறுகள் கரைபொருளாக அல்லது தொங்கலாக இருக்கலாம். நான்கைதரோநாப்தலீன் என்ற கரிமச் சேர்மம் ஐதரசன் வழங்கு கரைப்பானுக்கு ஒரு பாரம்பரிய எடுத்துக்காட்டாகும். [1] இது அடிமூலக்கூறுக்கு இரண்டு ஐதரசன் மூலக்கூறுகளை வழங்கி நாப்தலீனாக மாறுகிறது. நாப்தலீனின் ஐதரசனேற்ற தொகுவெப்பம் மிகவும் குறைவாகும். இது நான்கைதரோநாப்தலீனை உயர் அழுத்த ஐதரசன் முன்னிலையில் மீண்டும் உருவாக்க அனுமதிக்கிறது. மாலிப்டினம் டை சல்பைடு போன்ற வினையூக்கிகள் பெரும்பாலும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நான்கைதரோ குயினோலின், ஈரைதரோபினாந்தரின் போன்றவை தொடர்புடைய சில ஐதரசன் வழங்கு கரைப்பான்கள் அல்லது ஐதரசன் வழங்கு கரைப்பான்களின் பகுதிக்கூறுகளாகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Collin, Gerd; Höke, Hartmut; Greim, Helmut (2005), "Naphthalene and Hydronaphthalenes", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a17_001.pub2
  2. Takao Kaneko, Frank Derbyshire, Eiichiro Makino, David Gray, Masaaki Tamura, Kejian Li (2005), "Coal Liquefaction", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a07_197.pub2{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசன்_வழங்கு_கரைப்பான்&oldid=3035363" இலிருந்து மீள்விக்கப்பட்டது