ஐடென்டிட்டி
ஜேம்ஸ் மேன்கோல்ட்'ன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலப்படம் தான் ஐடென்டிட்டி. மைக்கேல் கூனி இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஜான் குசாக், ரே லியோட்ட, அமெண்டா பீட், ஆல்ஃப்ரெட் மோலினா, க்லீ ட்யூவல் மற்றும் ரெபெக்கா டே மோர்னே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் முதலில் வரும் சில நிமிட காட்சிகள் ரிவர்ஸ் க்ரோனாலஜி எனப்படும் பட்டர்ஃப்ளை எஃப்பெக்ட் போன்ற பின்னோக்கிய திரைக்கதைக்காக சிறந்த பாராட்டைப் பெற்றது.
கதைச்சுருக்கம்
[தொகு]ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பல்வேறு கொலை குற்றம் இழைத்தவராக மால்க்கம் ரிவர்ஸ் என்கிற நபர் அறிமுகப்படுத்தப்படுகிறார். மால்க்கம் தான் சிறுவனாக இருந்தபோழுதே விலைமாதுவாக இருந்த தன்னுடைய தாயினால் சாலையோர உணவகத்தில் கைவிடப்பட்ட ஒரு சிறுவனாக தன்னை அறிமுகப்படுத்தபடுகிறான். இதற்கிடையில் தான் செய்த கொலைகுற்றங்களுக்காக விசாரணைக்காக விசாரணைக்குழுவின் முன்னிறுத்தப்படுகிறான். உண்மையில் மால்க்கம் மனநிலை பிறழ்வினால் பாதிக்க பட்டவர் என்றும் இவர் தன்னிலை மறந்த நிலையிலேயே அனைத்து கொலைகளும் செய்ததாக மால்க்கம்-இன் மன நல மருத்துவர் மல்லிக் கண்டறிகிறார். மேலும் மல்லிக், மால்க்கம் ஏன் இந்த குற்றங்களை செய்தார் என்றும் விளக்குகிறார்.
இதற்கிடையில் அடுத்த காட்சியில் வெவ்வேறு சூழ்நிலையில் பலத்த மழையில் சிக்கிய ஒருவரையொருவை அறியாத பத்து நபர்கள் நவேடாவில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு சாலையோர உணவகத்தில் தஞ்சம் அடைகின்றனர். அந்தப் பத்து நபர்களில் முன்னாள் காவல் அதிகாரியும் தற்போதைக்கு ஒரு சொகுசு மகிழ்வுந்து ஓட்டுநருமாக இருக்கும் எட் டகோட்டா, கரோலின் சூசன் என்னும் 80'களில் பிரபலமான நடிகை, ராபர்ட் மைன் என்கிற கொடுங்குற்றவாளியை ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு அழைத்து செல்லுகிற ரோட்ஸ் என்கிற காவல் அதிகாரி, பாரிஸ் நவேடா என்றும் விலைமாது, லூ மற்றும் ஜின்னி என்கிற புதுதம்பதியர், மேலும் யார்க், யார்க்கின் மனைவி அலைஸ், அவர்களது 9 வயது வாய் பேச முடியாத மகன் டிம்மி ஆகியோர் அடங்குவர்.
இந்த மேற்கண்ட பத்து நபர்களில் யார்க்கின் மனைவி எட்வர்ட்'இன் மகிழ்வுந்தில் விபத்தில் சிக்கி காயப்படுவதின் பொருட்டு யார்க்கின் குடும்பமும், எட்வர்டும், எட்வர்ட் ஓட்டி வரும் மகிழ்வுந்தில் உள்ள முன்னாள் பிரபலமும் இந்த சாலையோர தங்கும்விடுதியில் தஞ்சமடைய நேரிடுகிறது.
இந்த தங்கும் விடுதி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரம் அளவிற்கு மட்டுமே செல்லக் கூடிய அளவில் மழையினால் துண்டிக்கப்பட்ட சாலை காரணமாக மற்றவர்களும் இந்த விடுதியில் தஞ்சமடைய நேரிடுகிறது. ஒரு வழியாக அந்த பத்து நபர்களும் அன்றைய இரவை அந்த விடுதியில் கழிக்க முடிவெடுக்கின்றனர். அவ்வாறே தங்கிய சில நிமிடங்களில் அங்கு மர்ம கொலைகள் நடந்தேறுவதை உணர்கின்றனர். ஒவ்வொரு நபராக வரிசையாக கொல்லப்படுகின்றனர். முதலாவதாக 80'களில் பிரபலமாக இருந்த கரோலின் சூசன் என்கிற முன்னாள் நடிகை இறக்கிறார். இவரது துண்டிக்கப்பட்ட தலையை எட்வர்ட் துணிதுவைக்கும் இயந்திரத்தில் கண்டுபிடிக்கிறார். சூசனை கொன்றது காவலதிகாரி ரோட்ஸ் அழைத்துவந்த மைன் தான் என்று எட்வர்ட் சந்தேகிக்கிறார். ரோட்ஸும் எட்வர்டும் மைன்'ஐ கட்டி வைத்திருந்த கழிவறைக்கு சென்று பார்க்கையில் அங்கு மைன் இல்லாதது கண்டு அவன் தான் குற்றவாளி என முடிவு செய்கிறனர்.
ஒரு கொலை குற்றவாளி தப்பிச்சென்று மறுபடியும் ஒரு கொலை செய்த காரணத்தினால் அந்த விடுதியில் தங்கியிருக்கும் மற்ற அனைவரும் கலவரமடைகின்றனர். இதில் மிகவும் பயந்து போன ஜின்னி தன்னுடைய அறையின் கழிவறைக்குள் நுழைந்து தாளிட்டு கொள்கிறாள். அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு வெளியில் இருந்து அவளிடம் பேசிகொண்டிருக்கும் அவளது கணவன் லூ மர்மமாக கொல்லப்படுகிறான். அங்கிருந்து தப்பிய மைன் பாலைவனத்தினூடே அந்த சூறாவளி மழையில் பல இன்னல்களை கடந்து அந்த தங்கும் விடுதியை விட்டு வெகுதொலைவிற்கு ஓடி வருகிறான். தூரத்தில் தெரியும் விளக்கு எறியும் வீட்டினுள் நுழைகிறான். ஆனால் அந்த இடம் தான் எங்கிருந்து தப்பி வந்தானோ அதே தங்கும் விடுதி தான் என்று அறிந்து திடுக்கிடுகிறான். என்ன நிகழ்கிறது என்று மைன் யோசிப்பதற்குள் எட்வர்டும், ரோட்ஸும் அவன் மேல் பாய்ந்து அவனை அடித்து ஒரு இருக்கையில் கட்டிப்போட்டு வைத்து விடுகிறனர். மேலும் மைன் தப்பி விடாமல் இருக்க காவலுக்கு அந்த விடுதியின் மேலாளர் லாரியை காவலிருக்க நிர்பந்திக்கிறனர். ஆனால் சிறிது நேரத்தில் மைன் பிணமாக கண்டெடுக்கப்படுவதால் ரோட்ஸும், எட்வர்டும் அந்த விடுதி மேலாளர் லாரியின் பக்கம் தங்களது சந்தேகத்தை திருப்புகிறனர்.
இதனால் லாரியை கைது செய்ய முயல்கின்றனர். இந்த நடவடிக்கையிலிருந்து தப்பிக்க எண்ணி பாரிஸை கத்தி முனையில் பிணையக்கைதியாக பிடிக்கிறான் லாரி இருவருக்கும் இடையில் நடக்கும் போரட்டத்தில் மேலாளர் லாரியின் குளிர் சாதனப்பெட்டியில் இருந்து உறைந்து போன பிணம் வெளிப்படுகிறது. ஒரு வழியாக லாரியை பிடித்து கட்டிவைத்து ரோட்ஸும், எட்வர்டும் விசாரிக்கின்றனர். லாரி தான் நிஜத்தில் இந்த விடுதியின் மேலாளர் இல்லையென்றும் அந்த உறைந்த நிலையில் இருக்கும் பிணம் தான் உண்மையான மேலாளர் என்றும் புதியதொரு உண்மையை கூறுகிறான். இந்த கலவரங்களுக்கிடையே திடீரென ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிக்க எத்தனிக்கும் போலி லாரி தான் ஓட்டி வந்த வண்டியை யார்க் மீது யதேச்சையாக மோதி விடுகிறான் இந்த விபத்தில் யார்க் கொல்லப்படுகிறார். இவ்வாறாக கொல்லப்படும் ஒவ்வொருவரின் பிணத்தின் அருகிலும் தங்கியிருக்கும் அந்த விடுதி அறையின் சாவி கண்டெடுக்கப்படுகிறது. அப்படி கண்டெடுக்கும் சாவியை அவரவர் இறந்த வரிசயின் படி அடுக்கும் பொழுது அது ஒரு இறங்கு வரிசை எண்ணாக வருகிறது. இவ்வாறு ரோட்ஸும் எட்வர்டும் புலனறிகையில் லாரியை கட்டி போட்டிருந்த அதே சமயத்திலேயே யார்க்கின் மனைவி அலைஸ் தான் விபத்தில் பட்ட காயங்களினால் இறந்ததை நினைவில் கொண்டு லாரி குற்றவாளியா இல்லையா என குழம்புகிறனர்.
இந்த குழப்பத்தில் இருந்து தாய் தந்தையை இழந்த அந்த சிறுவன் டிம்மியை மட்டுமாவது காப்பாற்ற எண்ணி டிம்மியையும், ஜின்னியையும் ஒரு மகிழ்வுந்தில் ஏறி தப்பிச்சென்று விடுமாரு எட்வர்ட் பணிக்கிறான். ஆனால் அந்த வண்டி வெடித்துச்சிதறுகிறது. ஆனால் அவ்வண்டியில் அவர்களது பிரேதம் இல்லாதது கண்டு ரோட்ஸ் அதிர்ச்சியடைகிறார். உடனே மற்ற பிணங்களை அதனதன் இடங்களில் போய் தேடும் ரோட்ஸ் அவற்றையெல்லாம் மாயமானது கண்டு மிகவும் குழம்பி விடுகிறார். இதற்கிடையே அங்கு குழிமியிருந்த அந்த பத்து நபர்களின் பிறந்த தேதியும் மே மாதம் 10-ஆம் நாள் என அறிந்து மேலும் குழம்பி விடுகிறனர். மேலும் எட்வர்ட் அந்த பத்து நபர்களில் பெயரிலும் ஒரு பாதியில் அமெரிக்காவின் எதேனும் ஒரு மாகாணத்தின் பெயர் இணைந்திருப்பதை எண்ணி வியக்கிறார். எடுத்துக்காட்டாக கரோலின் பெயரில் கரோலினா மாகாணம், லூ-வின் பெயரில் லூசியான மாகாணமும் இருப்பது போல அனைவரது பெயரிலும் ஒரு மாகாணப்பெயர் இருக்கிறது.
திடீரென அங்கிருந்து தப்பிச்செல்ல நினைக்கும் பாரிஸ் எதேச்சையாக ரோட்ஸ் ஒரு நிஜக்காவலாளி அல்ல என்றும் அவனும் மைன்-உம் இணைந்து தங்களை அழைத்துச் சென்ற ரோட்ஸ் என்கிற காவலாளியைக் கொன்றுவிட்டனர் என்றும் கண்டுபிடிக்கிறாள். இதையறிந்த ரோட்ஸ் என்கிற போலி காவல் அதிகாரி பாரிஸை கொல்ல முயல்கிறான். ஆனால் அவனை தீயணைக்கும் கருவியால் தாக்கி பாரிசை காப்பாற்றுகிறான் போலி லாரி. இந்த சண்டையில் போலி ரோட்ஸ் போலி லாரியை துப்பக்கியால் சுட்டு கொன்றுவிடுகிறான்.
இப்பொழுது திரைக்கதை மால்க்கமின் விசாரணை நிலைக்கு வந்து நிற்கிறது. இதுவரை நடந்த அனைத்தும் மால்க்கமின் மல்ட்டிப்பிள் பெர்சானலிட்டி டிஸாடர் என்கிற வினோத மனநோயினால் மால்க்கமின் மூளைக்கு அவனது கற்பனையாக நிகழ்ந்தவை என்றும் இதுவரை நடந்த தங்கும் விடுதி சம்பந்தமான அனைத்தும் அதனால் விழைந்த நிகழ்வுகள் என்று விளக்கப்படுகிறது.
இந்த மனப்பிறழ்வை நீதிபதிகளுக்கு புரியவைக்கு பொருட்டு மால்க்கமின் உள்ளிருக்கும் பல்வேறு மனித உணர்வுகளில் ஒன்றான எட்வர்ட் என்கிற நபரை மட்டும் வெளிகோண்டு வந்து விளக்குகிறார் மால்க்கமின் மன நல மருத்துவர் மல்லிக். இதுவரை அந்த சாலையோர தங்கும் விடுதியில் நடந்த ஒவ்வொரு நிகழ்வில் வரும் மனிதர்களும் நிஜமில்லை ஒவ்வொருவரும் மால்க்கமின் உள்ளுணர்வில் இருக்கும் நபர்கள் என்று மல்லிக் விளக்கமளிக்கிறார். மேலும் மல்லிக் எட்வர்ட் என்கிற கதாபாத்திரத்திடம் உண்மயை விளங்க வைக்கிறார். இதன் காரணமாக எட்வர்ட் என்கிற கதாபாத்திரம் அந்த விடுதியில் இறப்பது போல மால்க்கமின் மூளை சித்தரிக்கின்றது.
இப்போது மல்லிக் நீதிபதிகளிடம் மால்க்கமிற்கு சிகிச்சையளிக்க கோருகிறார். நீதிபதிகளும் சம்மதிக்கிறனர். இதுவரை மால்க்கமின் மூளைக்கு நடந்த போராட்டத்தில் மிச்சம் உயிரோடு இருப்பது டிம்மியும், பார்ஸும் மட்டும் தான். அவர்களுக்கு என்ன நிகழ்கிறது இதன் விளைவாக நிஜத்தில் என்ன நடக்கிறது என்பதே திரைப்படத்தின் முடிவாகிறது.
கதாப்பாத்திரங்களும் நடிகர்களும்
[தொகு]- வின்சென்ட் மால்க்கம் ரிவர்ஸாக - ப்ரூயிட் டெய்லர் வின்ஸ் (குற்றம் சாட்டப்பட்ட மன நலம் பாதித்த பாத்திரம்)
- எட்வர்ட் டகோட்டாவாக - ஜான் குசாக் (முன்னாள் காவலாளியும் தர்போதைய சொகுசு மகிழ்வுந்து ஓட்டுனர் பாத்திரம்)
- சாமுவேல் ரோட்ஸாக - ரே லியோட்டா (போலி காவலாளி பாத்திரம்)
- பாரீஸ் நெவேடாவாக - அமெண்டா பீட் (லாஸ் வேகாஸ் மாகாணத்தை சேர்ந்த விலைமாது பாத்திரம்)
- ஜின்னி இசியானாவாக - க்லீ டியூவல்ல் (புது தம்பதியினரான மணமகள்)
- லூ இசியானாவாக - வில்லியம் லீ ஸ்காட் (புது தம்பதியினரான மணமகன்)
- கரோலின் சூஸனாக - ரெபெக்கா டே மோர்னே (80 களில் பிரபலமான முன்னாள் நடிகை பாத்திரம்)
- லாரி வாஷிங்க்டனாக - ஜான் ஹாக்ஸ் (தங்கும் விடுதியின் போலி மேலாளர் பாத்திரம்)
- அலைஸ் யார்க்காக - லெய்லா கென்ஸெல் (மகிழ்வுந்து விபத்தில் சிக்கிய 9 வயது குழந்தையின் தாய் பாத்திரம்)
- ஜார் யார்காக - ஜான் சி.மெக் கின்லீ (அலைஸின் கணவர் பாத்திரம்)
- டிமோத்தி (எ) டிம்மி யார்க்காக - ப்ரெட் லோயெர் (அலைஸ் மற்றும் யார்க் தம்பதியின் 9 வயது மகன் பாத்திரம்)
- ராபர்ட் மைனாக - ஜேக் பூஸே (போலி காவலாளியின் கூட்டாளி பாத்திரம்)
- மருத்துவர் மல்லிக்காக - ஆல்ஃபிரட் மோலின் (மன நல மருத்துவர் பாத்திரம்)
- மார்ட்டியாக - கார்மென் அர்ஜென்ஸியானோ (மால்க்கமின் வழக்குறை ஞர் பாத்திரம்)
- கேரியாக - மார்ஷல் பெல் (மாவட்ட சட்ட அதிகாரி பாத்திரம்)
- க்ரெக்காக - மேட் லெட்ஸெர் (உதவி மாவட்ட சட்ட அதிகாரி பாத்திரம்)
- டெய்லராக - ஹோல்ம்ஸ் ஆஸ்போர்ன் (நீதிபதி பாத்திரம்)
- வரோலாக - ஃப்ரெடெரிக் காஃபின் (துப்பறிவதிகாரி பாத்திரம்)
- லாரியாக - ஸ்டூவர்ட் எம்.பெஸ்ஸெர் (தங்கும் விடுதியின் உண்மையான மேலாளர் பாத்திரம்)