ஐசோபியூட்டைரால்டிகைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில் புரோப்பேனால்
| |
வேறு பெயர்கள்
2-மெத்தில்புரோப்பியோனால்டிகைடு
| |
இனங்காட்டிகள் | |
78-84-2 | |
ChEBI | CHEBI:48943 |
ChemSpider | 6313 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6561 |
வே.ந.வி.ப எண் | NQ4025000 |
| |
UNII | C42E28168L |
பண்புகள் | |
C4H8O | |
வாய்ப்பாட்டு எடை | 72.11 கிராம்/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.79 கிராம்/செ.மீ3 |
உருகுநிலை | −65 °C (−85 °F; 208 K) |
கொதிநிலை | 63 °C (145 °F; 336 K) |
மிதமாக | |
இதர கரைப்பான்கள்-இல் கரைதிறன் | கரிமக் கரைப்பான்களுடன் கலக்கும் |
-46.38•10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.374 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றும் |
R-சொற்றொடர்கள் | 11 |
S-சொற்றொடர்கள் | 16 |
தீப்பற்றும் வெப்பநிலை | −19 °C; −2 °F; 254 K |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐசோபியூட்டைரால்டிகைடு (Isobutyraldehyde) என்பது (CH3)2CHCHO. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர்`ஆல்டிகைடு சேர்மமான ஐசோபியூட்டைரால்டிகைடு சமபகுதியப் பண்பை பியூட்டனால் எனப்படும் என்-பியூட்டைரால்டிகைடு சேர்மத்துடன் கொண்டுள்ளது[1]. ஈர தானியங்கள் அல்லது வைக்கோலின் நெடி இதன் மணமாகும். ஆல்பா ஐதரசன் அணுவை கொண்டிருந்தாலும் இச்சேர்மம் கான்னிசரோ வினைக்கு உட்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]பெரும்பாலும் புரோப்பீனை ஐதரோபார்மைலேற்றம் செய்யும் போது ஓர் உடன்விளைபொருளாக ஐசோபியூட்டைரால்டிகைடு உருவாகிறது. இச்சேர்மம் ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் டன்கள் இவ்வாறு தயாரிக்கப்படுகிறது[2].
வலிமையான கனிம அமிலங்கள் வினையூக்கியாகச் செயல்பட்டு மெத்தல்லைல் ஆல்ககாலை ஐசோபியூட்டைரால்டிகைடாக மறுசீராக்கம் செய்கின்றன.
பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி இயற்கையிலேயே கூட இச்சேர்மம் உற்பத்தியாகிறது[3]
வினைகள்
[தொகு]ஐசோபியூட்டைரால்டிகைடை ஐதரசனேற்றம் செய்தால் ஐசோபியூட்டனாலும், ஆக்சிசனேற்றம் செய்யும்போது மெத்தக்ரோலின் அல்லது மெத்தக்ரைலிக் அமிலமும் கிடைக்கின்றன. பார்மால்டிகைடுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் ஐதராக்சிபைவால்டிகைடு உருவாகிறது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Isobutyraldehyde is a retained trivial name under the IUPAC rules.வார்ப்புரு:BlueBook1993
- ↑ 2.0 2.1 Boy Cornils, Richard W. Fischer, Christian Kohlpaintner "Butanals" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2000, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a04_447
- ↑ Atsumi, Shota; Wendy Higashide; James C. Liao (November 2009). "Direct photosynthetic recycling of carbon dioxide to isobutyraldehyde". Nature Biotechnology 27 (12): 1177–1180. doi:10.1038/nbt.1586. பப்மெட்:19915552. http://www.nature.com/nbt/journal/v27/n12/full/nbt.1586.html.