ஏ. ஆர். மேனன்
ஏ. ஆர். மேனன் (A. R. Menon) (1886-1960) இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சார்ந்தவர். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி இவர். கேரளாவின் முதல் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.[1]
வாழ்க்கை வரலாறு
[தொகு]1886 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தியதி பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்து மருத்துவராக ஆனாலும் பொதுச் சேவையில் அதிக அளவு ஈடுபட்டார். கொச்சி பகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். பின்னர் திருவாங்கூர் மற்றும் கொச்சி இரண்டும் இணைந்ததும் சட்டமன்ற உறுப்பினராக 1954 முதல் 1956 வரை பணிபுரிந்தார். இவர் திருச்சூர் நகராட்சியின் தலைவராக 14 ஆண்டுகள் செயல்பட்டார். மேலும் பாலக்காடு நகராட்சியின் தலைவராக இரண்டு முறை தெர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை பல்கலைக்கழகத்தின் (Madras University Senate) செனட் உறுப்பினர் பதவியையும் வகித்திருந்தார். திருச்சூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று 05.04.1957 முதல் 31.07.1959 வரை நம்பூதிரிப்பாட் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். தனது 74 ஆவது வயதில் 09.10.1960 அன்று மரணமடைந்தார்.[2] அவருக்கு கேரள சட்டமன்றம் 10.10.1960 அன்று அஞ்சலி செலுத்தியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dr A.R Menon ( First Health Minister of Kerala)".
- ↑ "A.R.Menon". Archived from the original on 2013-08-19. பார்க்கப்பட்ட நாள் 2013-10-09.