ஏவூர் மேஜர் கிருஷ்ணசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏவூர் மேஜர் கிருஷ்ணசுவாமி கோயில் கேரளாவின் ஆலப்புழாவில் ஹரிபாட் அருகில் ஏவூரில் உள்ள ஒரு கிருஷ்ணர் கோயிலாகும். கோயிலின் தற்போதைய வடிவம் மூலம் திருநாளால் கட்டப்பட்டதாகும்.

மகாபாரதத் தொடர்பு[தொகு]

இக்கோயில் மகாபாரதத்தோடு தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.[1] [2]

மறுசீரமைப்பு[தொகு]

சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பு கோயில் கருவறை தீப்பற்றி எரிந்தது. எரியும் கோயிலிலிருந்து அங்கிருந்த சிலை மீட்கப்பட்டது. அப்போதைய மன்னரான மூலம் திருநாள் அவருடைய காசி யாத்திரையின்போது அக்கோயிலை புனரமைக்குமாறு கனவு வந்தது. உடனடியாகத் திரும்பிய அவர் புதிய கோயிலைக் கட்டினார்.[2]

மூலவர்[தொகு]

இங்குள்ள மூலவரின் சிறப்பு அவருடைய பிரயோக சக்ர பிரதிஷ்டை ஆகும். கிருஷ்ணர், விஷ்ணு வடிவில் நான்கு கைகளுடன் உள்ளார். அவை பாஞ்சஜன்ய சங்கு, சுதர்சன சக்கரம், வெண்ணெய், இடுப்பில் நான்காவது கை என்ற வகையில் உள்ளன. மூலவர் கோபமான வடிவில் உள்ளார். இங்கு ரக்த-புஷ்பாஞ்சலி சிறப்புக் காணிக்கையாகும். பிற கோயில்களில் அது கிடையாது. [3]

மகர விழா[தொகு]

இக்கோயிலில் மகர முதல் நாளில் தொடங்கி பத்து நாட்கள் விழா தொடர்ந்து நடைபெறும். கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா, புனித ஆறாட்டுடன் நிறைவடைகிறது. முடிவடைகிறது. தொடர்ந்து கொடி இறக்கப்படும். அடுத்து இறைவனை பள்ளியறைக்குக் கொண்டு செல்வர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mahabharata Adi Parva
  2. 2.0 2.1 2.2 Evoor Sri Krishna Swamy temple By Sri Krishna Dasa Rajeev
  3. "Evoor Sri Krishna Temple - Hindupedia, the Hindu Encyclopedia".