ஏற்றுமதி - இறக்குமதி வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு நாட்டில் இருந்து பொருட்களை வேற்று நாட்டுக்கு ஏற்றுமதி செய்வோரும் பிற நாட்டில் இருந்து தமது நாட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்வோரும் செலுத்த வேண்டிய வரிக்கு முறையே ஏற்றுமதி-இறக்குமதி வரி என்று பெயர்.

நோக்கம்[தொகு]

இறக்குமதி வரியை விதிப்பதற்கு பல நோக்கங்கள் (அரசாங்கத்துக்கு) இருக்கலாம்.

  1. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஆதரித்தல்: வெளி நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வோர், உள்நாட்டுத் தயாரிப்புகளின் விலையைவிட குறைந்த விலைக்கு அவற்றை விற்கலாம். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், தங்கள் பொருட்களை உள்நாட்டுச் சந்தையில் விற்க முடியாமல் போகலாம். இதனால் உற்பத்தி முடக்கம் ஏற்பட்டு தொழில்கள் நலிவடைந்து போக நேரிடலாம். இதனால் வேலையின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகள் எழக்கூடும். இத்தகைய மோசமான பின்விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது அரசாங்கம் "இறக்குமதி வரியை" விதிக்கலாம்.