உள்ளடக்கத்துக்குச் செல்

ஏர் கோஸ்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர் கோஸ்டா
IATA ICAO அழைப்புக் குறியீடு
LB LEP LECOSTA
செயற்பாடு துவக்கம்15 அக்டோபர் 2013
மையங்கள்
 • சென்னை பன்னாட்டு விமானநிலையம்,
 • விசாகப்பட்டினம் பன்னாட்டு விமானநிலையம்
இரண்டாம் நிலை மையங்கள்விஜயவாடா விமானநிலையம்
கவன செலுத்தல் மாநகரங்கள்திருப்பதி விமானநிலையம்
வானூர்தி எண்ணிக்கை4 (+50 on order)
சேரிடங்கள்9
தாய் நிறுவனம்LEPL குழுமம்
தலைமையிடம்விஜயவாடா
முக்கிய நபர்கள்எல். வி. எஸ். ராஜசேகர்
(இயக்குநர் & முதன்மை செயல் அலுவலர், LEPL குழுமம்)
கேப்டன் கே. என். பாபு
(முதன்மை செயல் அலுவலர், ஏர்கோஸ்டா)
பணியாளர்கள்740
வலைத்தளம்Aircosta.in

ஏர் கோஸ்டா (Air Costa) ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விஜயவாடாவினை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்திய விமானச் சேவை நிறுவனம் ஆகும். ஏர் கோஸ்டாவின் முதல் விமானப் பயணம் அக்டோபர் 2013 இல் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டது. சென்னை விமான நிலையம் ஏர் கோஸ்டாவின் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு மையங்களில் ஒன்றாகும்.[1][2][3] இது விஜயவாடாவினை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனமான LEPL குழுமத்தின் ஒரு பகுதியாகும். புலம்பெயர்ந்த விமானிகள் மற்றும் பொறியியலாளர்களுடன் சேர்த்து மொத்தம் 300 பணியாட்களுடன் தொடக்கப்பட்ட இந்நிறுவனம், அக்டோபர் 2013 முதல் தனது பணியினை செயல்படுத்தத் துவங்கியது.[4] எம்பெரர் ஈ – 170 வகை விமானங்களில் இரு விமானங்களைக் கொண்டு இது செயல்படத் தொடங்கியது.

அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, இந்தியாவில் மட்டும் 2015 ஆம் ஆண்டிற்காக சுமார் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.அத்துடன் 2015 ஆம் ஆண்டிற்குள், விஜயவாடா விமான நிலையத்தில் விமான பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் சீர்செய்தல் போன்ற செயல்பாடுகளைச் செய்யும் வண்ணம் வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, ஏர் கோஸ்டாவின் பராமரிப்பு மையம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பிப்ரவரி 2012 இல், LEPL குழுமம் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையிலாச் சான்றிதழைப் பெற்றது.[5] ஆரம்பத்தில் விமானச் சேவையினை க்யூ 400 ரக விமானங்களைக் கொண்டு தொடங்க ஏர் கோஸ்டா நிறுவனம் முடிவு செய்திருந்தது. இருப்பினும், ஜூன் 2013 இல் பாரிஸில் நடைபெற்ற விமானங்கள் பறக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் காட்சிகளில், மக்கள் விருப்பத்திற்கேற்ப எம்பெரர் ஜெட் விமானங்களைக் கொண்டு விமானச் சேவையினை துவங்கப்போவதாக தெரிவிக்கப்பட்டது.[6] சர்வதேச விமானப் போக்குவரத்தின் இயக்குனரிடம் இருந்து விமான செயல்பாட்டு அனுமதியினை செப்டம்பர் 2013 இல் ஏர் கோஸ்டா நிறுவனம் பெற்றது.

இலக்குகள்[தொகு]

ஏப்ரல் 2015 இன் படி ஏர் கோஸ்டாவின் இலக்குகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.[7]

நாடு மாநிலம் நகரம் விமான

நிலையம்

குறிப்புகள்
இந்தியா ஆந்திர

பிரதேசம்

விஜயவாடா விஜயவாடா

விமான நிலையம்

மையம்
இந்தியா ஆந்திர

பிரதேசம்

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினம்

சர்வதேச விமான நிலையம்

மையம்
இந்தியா ஆந்திர

பிரதேசம்

திருப்பதி திருப்பதி

விமான நிலையம்

கவனத்திற்குரிய

நகரம்

இந்தியா குஜராத் அஹமதாபாத் சர்தார்

வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்

இந்தியா கர்நாடகா பெங்களூர் கேம்பேகௌவ்டா

சர்வதேச விமான நிலையம்

இந்தியா ராஜஸ்தான் ஜெய்பூர் ஜெய்பூர்

சர்வதேச விமான நிலையம்

இந்தியா தமிழ்நாடு சென்னை சென்னை

சர்வதேச விமான நிலையம்

மையம்
இந்தியா தமிழ்நாடு கோயம்பத்தூர் கோயம்பத்தூர்

சர்வதேச விமான நிலையம்

இந்தியா தெலுங்கானா ஹைதராபாத் ராஜீவ்

காந்தி சர்வதேச விமான நிலையம்

தொடர்புகள்[தொகு]

இந்தியாவின் முக்கிய நகரங்களான ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, அஹமதாபாத், ஜெய்பூர், சென்னை, பெங்களூர் மற்றும் கோயம்பத்தூர் ஆகியவற்றினை ஒன்றிணைக்கும்படி ஏர் கோஸ்டா நிறுவனத்தின் விமானச் சேவைத் தொடர்புகள் உள்ளன. அத்துடன் புவனேஷ்வரில் தனது அடுத்த விமானச் சேவையினை தொடங்கவும் ஏர் கோஸ்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விமான குழு[தொகு]

ஈசிசி (ECC) யிடமிருந்து இரு எம்பெரர் ஈ - 170 ரக விமானங்களைக் குறிப்பிட்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்துத் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அதன் பின்னர் செப்டம்பர் 2015 இல், இரு எம்பெரர் ஈ – 190 ரக விமானங்களைத் தனது குழுமத்தில் சேர்த்தது. 2018 ஆம் ஆண்டிற்குள் சுமார் 25 விமானங்களைத் தனது விமானக் குழுமத்தில் இணைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏர் கோஸ்டா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.[8] 2015 ஆம் ஆண்டின் மே மாதத்தில் மூன்று எம்பெரர் ஈ – 190 ரக விமானங்களை தனது விமானக் குழுமத்துடன் இணைக்கப்போவதாக ஏர் கோஸ்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இச்செயல்பாட்டினை செப்டம்பர் 2015 இலிருந்து ஜனவரி 2016 க்குள் முடிக்கவும் ஏர் கோஸ்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலீட்டுப் பணத்தினை, தனியார் பங்கு முதலீட்டாளர்களிடம் பங்குகளை விற்பதன் மூலம் பெறுவதென ஏர் கோஸ்டா முடிவு செய்துள்ளது.

ஏர் கோஸ்டாவின் விமானக் குழு விவரங்கள் பின்வருமாறு:

விமானம் சேவையில்

இருப்பவை

ஆர்டர்கள் விருப்பங்கள் பயணிகள் குறிப்புகள்
J Y
எம்பெரர்

ஈ - 170

2 8 7 60 67 ECC விடம்

இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டது

எம்பெரர்

ஈ – 190

2 13 0 112 112 GECAS விடம்

இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டது

எம்பெரர்

ஈ190-ஈ2

- 25 [12] 50 அறிவிக்கப்படவுள்ளது 2018 முதல்விநியோகங்கள் தொடங்கப்படவுள்ளது.ஆசியவெளியீட்டு நுகர்வோர்
எம்பெரர்

ஈ195-ஈ2

- 25 [12] அறிவிக்கப்படவுள்ளது
மொத்தம் 4 71 50

பிரேசில் எம்பெரர் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து சுமார் 2.94 பில்லியன் டாலர்கள் மதிப்பில் 50 ஈ-ஜெட் ஈ2 ரக விமானங்களை ஏர் கோஸ்டா நிறுவனம் வாங்கவுள்ளது. இதற்கான செயல்பாடு பிப்ரவரி 13, 2014 இல் தொடங்கப்பட்டதாக இரு தரப்பும் அறிவித்தது.[9]

சிங்கப்பூர் விமானங்கள் பறக்கும் காட்சியக நிகழ்ச்சியில் அடுத்த 50 விமானங்கள் வாங்குவது பற்றி ஏர் கோஸ்டா நிறுவனம் அறிவித்தது. ஈ-ஜெட் ஈ2 நிறுவனத்திடம் இருந்து இந்தியாவில் ஒரு நிறுவனம் விமானங்களை வாங்குவது இதுவே முதல்முறை. அந்நிறுவனம் இந்தியாவில், தனது முதல் விமான விநியோகத்தினை 2019 இல் இருந்து தொடங்கவுள்ளது.

குறிப்புகள்[தொகு]

 1. "Air Costa takes off from Chennai today". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/air-costa-takes-off-from-chennai-today/article5234601.ece. பார்த்த நாள்: 16 October 2013. 
 2. "First Air Costa flight flagged off by Kiran (Chief Minister of Andhra Pradesh State)". The New Indian Express. http://newindianexpress.com/cities/hyderabad/First-Air-Costa-flight-flagged-off-by-Kiran/2013/10/16/article1837590.ece. பார்த்த நாள்: 16 October 2013. 
 3. "Air Costa, India's newest airline, takes flight today". Business Today. http://businesstoday.intoday.in/story/air-costa-india-newest-airline-starts-today-oct-14/1/199566.html. பார்த்த நாள்: 16 October 2013. 
 4. "LEPL to invest Rs 600 cr in Air Costa". Business Standard. http://www.business-standard.com/article/companies/lepl-to-invest-rs-600-cr-in-air-costa-113100800667_1.html. பார்த்த நாள்: 16 October 2013. 
 5. "Air Costa to be launched soon". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/air-costa-to-be-launched-soon/article2921813.ece. பார்த்த நாள்: 23 February 2012. 
 6. "India's Air Costa Acquires three E-Jets".
 7. "Air Costa". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 2015-20-05. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 8. "India's Air Costa places a firm order for 50 E-Jets E2s".
 9. "Air Costa plans to raise funds through stake sale; to add three more Embraer aircraft". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_கோஸ்டா&oldid=3928305" இலிருந்து மீள்விக்கப்பட்டது