ஏஞ்சலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏஞ்சலிசு (Angeles) என்பது பிலிப்பீன்சு நாட்டின் நகரம் ஆகும். இந்த நகரம் பிலிப்பீன்சு நாட்டின் மத்திய லூசோன் பகுதியின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நகரமாகும். 2015 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரில் 411,634 மக்கள் வசிக்கின்றனர்.[1]

அமைவிடம்[தொகு]

இந்த நகரத்தின் எல்லைகளாக வடக்கில் மாபல்காட், கிழக்கில் மாக்சிகோ, தென்கிழக்கில் சான் பெர்னாண்டோ , தெற்கே பேகோலர் மற்றும் தென்மேற்கு, மேற்கில் போராக் என்பன அமைந்துள்ளன. இந்த நகரம் பம்பங்கா மாகாணத்திலிருந்து தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட்டாலும் மாகாணத்தின் வணிக மற்றும் நிதி மையமாக திகழ்கின்றது.

ஏஞ்சலிசு நகரம் பிலிப்பீன்சு தலைநகரமான மணிலாவிலிருந்து 83 கிலோமீற்றர் (52 மைல்) தொலைவிலும், மாகாண தலைநகர் சான் பெர்னாண்டோவிலிருந்து 17 கிலோமீற்றர் (11 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

காலநிலை[தொகு]

கோப்பனின் காலநிலை வகைப்பாட்டு முறையின் கீழ் வெப்பமண்டல சவன்னா காலநிலையைக் கொண்டுள்ளது. இது வெப்பமண்டல பருவமழை காலநிலையின் எல்லையாகும் (கோப்பன் காலநிலை வகைப்பாடு Aw / Am). திசம்பர் முதல் ஏப்ரல் வரை வறண்ட காலமும், மே முதல் நவம்பர் வரை ஈரமான பருவமுமாக இரண்டு தனித்துவமான பருவங்களை ஏஞ்சலிசு நகரம் அனுபவிக்கின்றது. 1953 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை, சராசரி தினசரி குறைந்த அளவு வெப்பநிலை 73.6 °F ஆகவும், சராசரி தினசரி அதிகபட்ச வெப்பநிலை 88.1 °F ஆகவும் இருந்தது. சூன் மாதம் வெப்பமாகவும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் குளிராகவும் காணப்படுகின்றது. சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 78.39 அங்குலங்கள் ஆகும். நவம்பர் 28, 1974 அன்று தைபூன் இர்மா உட்பட பல சேதப்படுத்தும் புயல்கள் நகரத்தைத் தாக்கியுள்ளன.

கலாச்சாரம்[தொகு]

ஒவ்வொரு வருடத்திலும் அக்டோபரிலும் டிக்டிகன் டெராகன் கெங் தலன் (லைட் மியூசிக் அண்ட் டான்சிங் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ்) என்று அழைக்கப்படும் ஒரு தெரு விருந்தை இந்த நகரம் நடத்துகிறது. இதன் இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.[2]

உள்நாட்டில் சத்சரன் குங் ஏஞ்சல்ஸ் என்று அழைக்கப்படும் சிசிக் திருவிழா ஒவ்வொரு திசம்பரிலும் நடைப்பெறும். கபம்பங்கன் உணவு பதார்த்தம், சிசிக் உணவு என்பன திருவிழாக்களில் பிரபலமான உணவுகளாகும்.[3] 2008 ஆம் ஆண்டில் லூசியா குனானன் இறந்ததைத் தொடர்ந்து இது நிறுத்தப்பட்டது. மீண்டும் சுற்றுலாத் துறையுடன்இணைந்து ஏப்ரல் 2017 ஆம் ஆண்டில் ஒரு நாள் விழாவாக திருவிழா புதுப்பிக்கப்பட்டது.

மதம்[தொகு]

ஏஞ்சலிசு நகரின் மக்கட் தொகையில் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக்கர்கள் ஆவார்கள். [சான்று தேவை] நகரில் கத்தோலிக்க நம்பிக்கையுடன் தொடர்புடைய குறைந்தது இரண்டு பெரிய திருவிழாக்களாவது அக்டோபரில் நடத்தப்படுகின்றன. 1646 ஆம் ஆண்டுகளில் இடச்சு கடற்படை மீது எசுப்பானிய கடற்படை பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் விழாவொன்று மணிலாவின் கொண்டாடப்படுகிறது. விசுவாசிகளால் அற்புதம் என்று நம்பப்படும் கல்லறையில் இயேசு கிறிஸ்துவின் உருவத்தை வணங்குவதற்காக பம்பங்கா முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.[4]

பொருளாதாரம்[தொகு]

ஏஞ்சல்சு வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையின் தாயகமாகும். அதன் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் சூதாட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது. பீல்ட்ஸ் அவென்யூ என்பது ஏஞ்சலீசை மையமாகக் கொண்ட இரவு வாழ்க்கைத் தொழிலின் மையமாகும். இந்த நகரை ஆண்டு முழுவதும் பார்வையாளர்கள் பார்வையிடுகின்றனர்.[5] ஏஞ்சலிசு நகரில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஏராளமான உணவகங்கள் காணப்படுகின்றன.

நகரில் குடிசைத் கைத்தொழில்கள் நடைப்பெறுகின்றன. இங்கு பிரம்பு தளபாடங்கள், கைவினைப்பொருட்கள், உலோக கைவினைப்பொருட்கள், பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்ற பல ஏற்றுமதி வணிகங்களை கொண்டுள்ளது.[4]

சான்றுகள்[தொகு]

  1. "Census of Population (2015). "Region III (Central Luzon)". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "The Daily Tribune < Without Fear or Favor >>>". web.archive.org. 2007-09-28. Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2019-11-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. ":: Malaya - The National Newspaper ::". web.archive.org. 2007-12-16. Archived from the original on 2007-12-16. பார்க்கப்பட்ட நாள் 2019-11-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. 4.0 4.1 "WOW Philippines :: Explore Philippines :: Things to Do". web.archive.org. 2006-04-28. Archived from the original on 2006-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-11-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. "Angeles City - Philippines". web.archive.org. 2009-04-15. Archived from the original on 2009-04-15. பார்க்கப்பட்ட நாள் 2019-11-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சலிசு&oldid=3639326" இலிருந்து மீள்விக்கப்பட்டது