எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்
எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் | |
---|---|
இயக்கம் | சேர்ஜியோ லியோனி |
தயாரிப்பு | அரிகோ கொழும்பு ஜோர்ஜியோ பாபி |
கதை | எ.பொன்சோனி விக்டர் அன்ரியாஸ் கட்டேனா சேர்ஜியோ லியோனி ஜைம் கோமஸ் கில் |
இசை | என்னியோ மோரிகோனி |
நடிப்பு | கிலிண்ட் ஈஸ்ட்வுட் மரியான் கோச் ஜோனி வெல்ஸ் அந்தோனியோ பிரீத்தோ |
விநியோகம் | உனிடிஸ் யுனைட்டேட் ஆர்டிஸ்ட்ஸ் (அமெரிக்கா) |
வெளியீடு | டிசம்பர் 10 1964 ஜனவரி 18 1967 |
ஓட்டம் | 99 நிமிடங்கள் |
மொழி | இத்தாலிய மொழி ஆங்கிலம் ஸ்பானிஷ் |
ஆக்கச்செலவு | $200,000 இலட்சம் அமெரிக்க டாலர்கள் |
பின்னர் | ஃபோர் எ ஃபியூ டாலர்ஸ் மோர் |
எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் (ஆங்கிலம்: A Fistful of Dollars, இத்தாலிய மொழி : Per un pugno di dollari ) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலிய மொழித் திரைப்படமாகும். சேர்ஜியோ லியோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிலிண்ட் ஈஸ்ட்வுட், மரியான் கோச் மற்றும் பலர் நடித்திருந்தனர். இது டாலர்கள் முப்படத்தொகுதியில் வெளியான முதல் திரைப்படமாகும். ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகெங்கும் திரையிடப்பட்டது. ஸ்பகெட்டி மேற்கத்தியப் பாணி திரைப்படங்களின் முன்னோடிப் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மெக்சிக்க-அமெரிக்க எல்லைப்புற சிறு நகரொன்றில் இரு கும்பல்களுக்கிடையே நடைபெறும் தொடர் மோதல்களைப் பயன்படுத்தி இரு தரப்பிலும் ஆதாயம் தேட முயலும் துப்பாக்கி வீரனின் சாகசங்கள் திரைப்படத்தின் கதைக்களமாக அமைந்தது. அகிரா குரோசாவா இயக்கிய யோஜிம்போ படத்தினைப் போன்ற திரைக்கதை அமைப்பு இருந்தது. இதனால் குரோசாவா இத்திரைப்படம் மீது வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் டாலர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு $100,000 அபராதம் வழங்கப்பட்டது. திரைப்படத்தின் வசூலின் 15% சதவீதம் குரோசாவாவுக்கு வழங்கப்பட்டது.