எஸ். ஜி. சூர்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ் ஜி சூர்யா
மாநிலச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு
இணையத்தளம்suryah.in

எஸ். ஜி. சூர்யா, தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆவார். கோயம்புத்தூரில் பிறந்த சூர்யா வாசவி வித்தியாலயாவில்பள்ளிப் படிப்பு முடித்து பின் புகழ்பெற்ற பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் புனே நகரத்தின் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். இவரின் தாத்தா மறைந்த திருக்கோவிலூர் சுந்தரம் முதலியார் ஆவார்.

2012ம் ஆண்டில் குஜராத் மாநில தேர்தல் களத்தில் இன்றைய பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆதரவாக தகவல் தொழில் நுட்ப யுக்தி குழுவில் இடம் பெற்றிருந்தார். தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோதியின் சிறப்பு தகவல் தொழில்நுட்ப குழுவிலும் பங்கு பெற்றார். பின்னர் 2016ம் ஆண்டில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப குழுவின் பிரிவுக்கு தலைமை தாங்கினார். 2022ம் ஆண்டு முதல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளராக உள்ளார்.[1]

இவர் 10 நாள் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிக்காக, இந்தியாவில் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவராக 2018ல் இஸ்ரேல் சென்றார். பின்னர் தென் கொரியாவிற்கு 12 நாட்கள் இந்திய இளைஞர் தலைவர்கள் குழுவில் சென்றார். அவர் ஒரு திறமையான கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் 7 நூல்கள் எழுதியுள்ளார்.[2] பன்னாட்டு இளம் தலைவர்கள் திட்டத்தின் கீழ் எஸ். ஜி. சூர்யா, சனவரி 2023ல் அமெரிக்க நாட்டின் விருந்தினராக அழைக்கப்பட்டார்.[3]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜி._சூர்யா&oldid=3649043" இலிருந்து மீள்விக்கப்பட்டது