எஸ். காமராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். காமராஜ் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் 14 ஆவது சட்டப்பேரவையின் உறுப்பினரும் ஆவார். பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

1964 மே மாதம் 27 ம் தேதி பிறந்த இவர் திருமணமானவர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் இனாம் கரூர் நகராட்சி உறுப்பினராகவும் இருந்தவர். இவரது தந்தை பெயர் செல்லமுத்து.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._காமராஜ்&oldid=2821258" இருந்து மீள்விக்கப்பட்டது