எஸ். எம். ராமநாதன்
எஸ். எம். ராமநாதன் (S. M. Ramanathan, இறப்பு: 18 டிசம்பர் 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடக, மற்றும் திரைப்பட நடிகர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
ராமநாதன் நகைச்சுவை நடிகை மனோரமாவின் கணவர் ஆவார். நாடகங்களில் நடித்து வந்தவர். 1959 இல் வெளியான கண் திறந்தது திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தேடிவந்த லட்சுமி, கறுப்புப் பணம், கருந்தேள் கண்ணாயிரம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்தார்.[1]
ஒரே நாடகக் கம்பனியில் நடித்து வந்த மனோரமாவை 1964 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார்.[2] ஆனாலும் மகன் பூபதி பிறந்து 15 நாட்களிலேயே இருவரும் பிரிந்தனர்.[3] அதன் பின்னர் நாடக நடிகையான பங்கஜம் என்பவரை மணந்தார்.[1]
நடித்த திரைப்படங்கள்[தொகு]
- கண் திறந்தது (1959)
- கறுப்புப் பணம் (1964)
- நினைவில் நின்றவள் (1967)
- கருந்தேள் கண்ணாயிரம் (1972)
- தேடிவந்த லட்சுமி (1973)
மறைவு[தொகு]
இராமநாதன் 1990 டிசம்பர் 18 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Ramanathan.S.M (மனோரமாவின் கணவர்)". Antru Kanda Mugam. 1 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Biography of 'Aachi'-Manorama-Guinnes Record- Tamil Actress". Infoqueenbee. 1 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Potpourri of titbits about Tamil cinema - Manorama". Kalyanamalai Magazine. 1 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது.