எவிங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எவிங்கைட்டு
Ewingite
பொதுவானாவை
வகைகரிமக் கனிமம்
வேதி வாய்பாடுMg8Ca8(UO2)24(CO3)30O4(OH)12•138H2O
இனங்காணல்
நிறம்மஞ்சள்
படிக அமைப்புநாற்கோணகம்
விகுவுத் தன்மைmohs=
மேற்கோள்கள்[1]

எவிங்கைட்டு (Ewingite) என்பது Mg8Ca8(UO2)24(CO3)30O4(OH)12•138H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். செக் குடியரசின் பிளாவ்னோ சுரங்கத்திலுள்ள செக் குடியரசின் அறிவியல் கல்வி கழகத்தில் இடம்பெற்றுள்ள இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த யாகூப் பிளாசில் இக்கனிமத்தைக் கண்டுபிடித்தார். பூமியில் கட்டமைப்பு ரீதியாக மிகவும் சிக்கலாக அறியப்பட்டுள்ள கனிமம் இதுவென்று நோட்ரே தேம் பல்கலைக்கழகத்தின் டிராவிசு ஓல்டு மற்றும் சகாக்கள் எவிங்கைட்டைக் குறித்து விவரித்தனர். அமெரிக்காவின் சிடான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவி அறிவியல் பேராசிரியர் உரோத்னெ சி எவிங்கு நினைவாக இக்கனிமத்திற்கு எவிங்கைட்டு என்று பெயரிடப்பட்டது.[2]

இக்கனிமம் மிகவும் அரிதானதாகும். ஏனெனில் இதன் pH அளவும் இதை உருவாக்க தேவைப்படும் கூட்டமைவு வரம்பும் மிகக்குறுகியவையாகும். இந்நிபந்தனைகள் பிளாவ்னோ சுரங்கத்தில் மட்டுமே நிகழ்கின்றன. சுரங்கத்தின் ஈரப்பதமான சூழலில் நிகழும் யுரேனியம் ஆக்சிஜனேற்றம் மூலம் எவிங்கைட்டு உருவாகிறது.[2]

இராபிட்டைட்டு, சுவார்ட்சைட்டு, அல்பிரக்டுகிரௌபைட்டு போன்ற கனிமங்களின் வேதிப் பண்புகளுடன் எவிங்கைட்டின் பண்புகள் ஒத்துள்ளன.[1]

லாசு ஏஞ்சல்சு மாகாணத்திலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கனிமவியல் பொருட்களில் எவிங்கைட்டின் மாதிரி இடம்பெற்றுள்ளது.[2]

தோற்றம்[தொகு]

செக் குடியரசின் மேற்கு பகுதியிலுள்ள பொகிமியாவில் இடம்பெற்றுள்ள கார்லோவி வேரி மண்டலத்தின் பிளாவ்னோ சுரங்கத்தில் எவிங்கைட்டு கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எவிங்கைட்டு&oldid=3546100" இருந்து மீள்விக்கப்பட்டது