எல். கைலாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாக்டர். எல். கைலாசம்
பிறப்புஜூலை 10, 1958
திருநெல்வேலி, தமிழ்நாடு
இருப்பிடம்மைலாப்பூர், சென்னை, தமிழ் நாடு
தேசியம்இந்தியன்
கல்விM.Sc, ML, MCA, AICWA, ACS, FIV, PhD
அறியப்படுவது முத்துச்சிப்பி, மலர்ச்சோலை மங்கை, மணிமகுடம், கயல், சுதந்திரச்சுடர்கள்
வாழ்க்கைத்
துணை
திருமதி. லஷ்மி
பிள்ளைகள்டாக்டர். கே. லட்சுமணன், கே. சுப்பிரமணியன்

வரலாற்றுப் புதின எழுத்தாளர் டாக்டர் எல். கைலாசம், சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர். இவர் மூன்றுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புதினங்களையும் மட்டுமல்லாது, தணிக்கை துறை சம்பந்தமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இயற்றியுள்ளார்.

இவர் எழுதிய மலர்ச்சோலை மங்கை என்ற நாவல், கல்கியின் பொன்னியின் செல்வன் முன்பாக நடைபெரும் கதைக்களத்தை கொண்டது. மற்றொரு புத்தகமான கயல் எனும் நாவலை, பாண்டியர்களின் வரலாற்றை தழுவி அமைத்துள்ளார். மணிமகுடம் என்ற நாவலில் சேரநாட்டு மாமன்னர் குலசேகர ஆழ்வாரின் வாழ்க்கை சித்திரத்தை தெளிந்த நடையில் சொல்லியுள்ளார். இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை தொகுத்து சுதந்திர சுடர்கள் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இந்த புத்தகங்கள் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

திரு. கைலாசம் அவர்கள், அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவர் பாண்டிய நாட்டு சரித்திரத்தையும் மீனவர்களின் வாழ்வியலையும் ஆதாரமாகக் கொண்டு முத்துச்சிப்பி என்ற புதினத்தை எழுதியிருக்கிறார். விலாசினி மற்றும் சுதந்திர தேவி வேலு நாச்சியர் ஆகிய அவரின் புதினங்கள் சரித்திரம் படைத்தவை. கேரள சரித்திரத்தை பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய REVENGE எனும் ஆங்கிலப் புதினம் புகழ்பெற்றது.

இது தவிர, பத்மவியூகம் எனும் சரித்திர புதினத்தையும், ஆடிட்டர் குமரன் என்ற புதினத்தையும், Exploring Misstatements,  Cluster Analysis of Financial Statement என்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

தற்பொழுது சோழநாட்டு சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்டு ராஜாளி என்ற மிகப் பெரிய சரித்திர புதினத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். இந்தப் புத்தகம் வானதியால் வெளியிடப்படவுள்ளது

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._கைலாசம்&oldid=2826609" இருந்து மீள்விக்கப்பட்டது