முத்துச்சிப்பி (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்துச்சிப்பி
நூல் அட்டை
நூலாசிரியர்எல்._கைலாசம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்பேலஸ் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2013 (முதல் பதிப்பு)

பன்முக எழுத்தாளர் டாக்டர் எல். கைலாசம், ஐநூறு ஆண்டுகட்கு முந்தைய பாண்டிய நாட்டு வரலாற்றையும், மீனவர்களின் அன்றைய வாழ்வியலையும் ஆதாரமாகக் கொண்டு "முத்துச்சிப்பி" என்ற இந்த புதினத்தை எழுதியிருக்கிறார்.

கதை சுருக்கம்[தொகு]

முத்துச்சிப்பி, பதினைந்தாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த மீனவர்களின் வாழ்கையை முறையையும் மற்றும் கலாச்சாரத்தையும் விவரிக்கும் ஒரு வரலாற்று புதினமாகும். பாண்டிய மாமன்னன் ஆகவராமர் மற்றும் அவரின் புதல்வர்களின் தியாகங்களை தழுவி இப்புதினத்தின் கதை நகருகின்றது.

இப்புதினம் அன்றைய தமிழ் மக்களின், குறிப்பாக மீனவர் சமூகத்தினரின் கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கைகள் மற்றும் சமூக வரலாற்றை நல்ல கதையம்சத்தோடுத் தருகிறது. இது பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துச்சிப்பி_(புதினம்)&oldid=3649996" இலிருந்து மீள்விக்கப்பட்டது