எல்ஸ்டார்
Appearance
மோலசு டொமசுடிகா Malus domestica 'எல்ஸ்டார்' | |
---|---|
கலப்பினப் பெற்றோர் | இன்கிரிட் மேரி & டைம்சு; கோல்டன் டெலிசியசு |
பயிரிடும்வகை | எல்ஸ்டார் |
தோற்றம் | நெதர்லாந்து 1950 |
எல்ஸ்டார் (Elstar) ஆப்பிள் என்பது ஆப்பிள் வகைகளுள் ஒன்றாகும். இது முதலில் 1950ல் நெதர்லாந்தில் எல்ஸ்டில் கோல்டன் சுவை மற்றும் இன்கிரிட் மேரி ஆப்பிள்களைக் கலப்புச் செய்து தோற்றுவிக்கப்பட்டது. இது விரைவாக ஐரோப்பாவில் பிரபலமடைந்தது. பின்னர் அமெரிக்காவில் 1972இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இது கான்டினென்டல் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் ஐக்கிய இராச்சியத்தில் குறைவாகவே பயன்பாட்டில் உள்ளது.
எல்ஸ்டார் நடுத்தர அளவிலான ஆப்பிள் ஆகும். இதன் தோல் பெரும்பாலும் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். சதை வெண்மையானது, மென்மையான, மிருதுவான அமைப்பைக் கொண்டுள்ளது. ஆப்பிள் சுவைகலவை தயாரிக்க மிகவும் நல்லது. இருப்பினும், பொதுவாக, இதன் இனிப்பு சுவை காரணமாக சலாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
சந்ததி சாகுபடிகள்
[தொகு]- சந்தனா (எல்ஸ்டார் × பிரிஸ்கில்லா)
- ஈகோலெட் (எல்ஸ்டார் × ப்ரிமா)
- கொலினா (பிரிஸ்கில்லா × எல்ஸ்டார்)
நோய் பாதிப்பு
[தொகு]- ஸ்கேப் : உயர்
- நுண்துகள் பூஞ்சை காளான் : அதிக அளவில்
- சிடார் ஆப்பிள் துரு : அதிக அளவில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Elstar profile on cffresh.com பரணிடப்பட்டது 2006-05-09 at the வந்தவழி இயந்திரம்