எல்முட் கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹெல்முட் கோல்
Helmut Kohl
Helmut Kohl 1989.jpg
செருமனியின் அரசுத்தலைவர்
(மேற்கு செருமனி 1990 வரை)
பதவியில்
1 அக்டோபர் 1982 – 27 அக்டோபர் 1998
முன்னவர் எல்முட் சிமித்
பின்வந்தவர் கெர்ஃகாத் சுரோடர்
ரைன்லாந்து-பலத்தினேட் மாநில முதலமைச்சர்
பதவியில்
19 மே 1969 – 2 திசம்பர் 1976
முன்னவர் பீட்டர் ஆல்ட்மெயர்
பின்வந்தவர் பெர்னார்ட் வோகல்
தனிநபர் தகவல்
பிறப்பு எல்முட் யோசப் மைக்கேல் கோல்
ஏப்ரல் 3, 1930(1930-04-03)
லுத்விக்சாஃபென், செருமனி
இறப்பு 16 சூன் 2017(2017-06-16) (அகவை 87)
ஒகர்சைம், செருமனி[1]
அரசியல் கட்சி கிறித்தவ சனநாயக ஒன்றியம்
வாழ்க்கை துணைவர்(கள்) அன்னலோர் ரென்னர் (தி. 1960–2001; மறைவு)
மைக் ரிக்டர் (தி. 2008–2017)
பிள்ளைகள் 2
படித்த கல்வி நிறுவனங்கள் ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்
சமயம் கத்தோலிக்க திருச்சபை
கையொப்பம்

எல்முட் யோசப் மைக்கேல் கோல் (Helmut Josef Michael Kohl, 3 ஏப்ரல் 1930 – 16 சூன் 2017) செருமானிய அரசியல்வாதியாவார். இவர் 1982 முதல் 1998 வரை மேற்கு செருமனியின் அரசுத்தலைவராகவும், பின்னர் 1990 முதல் 1998 வரை ஒன்றுபட்ட செருமனியின் அரசுத்தலைவராகவும் பதவியில் இருந்தவர். 1972 முதல் 1998 வரை கிறித்தவ சனநாயக ஒன்றியக் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். 1969 முதல் 1976 வரை மேற்கு செருமனியின் ரைன்லாந்து-பலத்தினேட் மாநில முதலமைச்சராகப் பதவியில் இருந்தார்.

ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்கிற்குப் பின்னர் அதிக காலம் (16 ஆண்டுகள்) அரசுத்தலைவராகப் பதவி வகித்தவர் கோல் ஆவார். பனிப்போரின் இறுதிக்கட்ட காலத்தில் பதவியில் இருந்த கோல் செருமானிய மீளிணைவிற்குப் பெரும்பங்காற்றியிருந்தார். பிரான்சிய அரசுத்தலைவர் பிரான்சுவா மித்தரானுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தையும் யூரோ நாணயத்தையும் உருவாக்க உதவிய மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "German reunification architect Helmut Kohl dies at 87" (16-06-2017). பார்த்த நாள் 17-07-2017.
  2. Chambers, Mortimer (2010). The Western Experience (10th ed.). New York: McGraw-Hill Higher Education. ISBN 978-0077291174. OCLC 320804011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்முட்_கோல்&oldid=2380213" இருந்து மீள்விக்கப்பட்டது