ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்
BismarckArbeitszimmer1886rest.jpg
ஜேர்மன் பேரரசின் முதல் தலைவர்
பதவியில்
21 மார்ச் 1871 – 20 மார்ச் 1890
அரசர் ஜேர்மனியின் முதலாம் வில்ஹெல்ம் (1871-1888)
மூன்றாம் பிரீட்ரிக் (1888)
இரண்டாம் வில்ஹெல்ம் (1888-1890)
முன்னவர் முதலாம் சான்செலர்
பின்வந்தவர் லியோ ஃபொன் கப்ரிவி
9th Minister President of the Kingdom of Prussia
பதவியில்
23 செப்டெம்பர் 1862 – 1 ஜனவரி 1873
அரசர் முதலாம் வில்ஹெல்ம்
முன்னவர் Adolf of Hohenlohe-Ingelfingen
பின்வந்தவர் ஆல்பிரெக்ட் ஃபொன் ரூன்
11th Minister President of the Kingdom of Prussia
பதவியில்
9 நவம்பர் 1873 – 20 மார்ச் 1890
அரசர் முதலாம் வில்ஹெல்ம் (1873-1888)
மூன்றாம் பிரீட்ரிக் (1888)
இரண்டாம் வில்ஹெல்ம் (1888-1890)
முன்னவர் ஆல்பிரெக்ட் ஃபொன் ரூன்
பின்வந்தவர் லியோ ஃபொன் கப்ரிவி
Federal Chancellor of the North German Confederation
பதவியில்
1867–1871
குடியரசுத் தலைவர் முதலாம் வில்ஹெல்ம்
முன்னவர் கூட்டமைப்பு நிறுவப்பட்டது
பின்வந்தவர் ஜேர்மன் பேரரசு
23ம் பிரசிய அரசின் வெளிநாட்டு அமைச்சர்
பதவியில்
1862–1890
அரசர் முதலாம் வில்ஹெல்ம் (1862-1888)
மூன்றாம் பிரீட்ரிக் (1888)
இரண்டாம் வில்ஹெல்ம் (1888-1890)
பிரதமர் 1862-1873
1873-1890)
முன்னவர் ஆல்பிரெக்ட் ஃபொன் பேர்ன்ஸ்டோர்ஃப்
பின்வந்தவர் லியோ ஃபொன் கப்ரிவி
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 1, 1815(1815-04-01)
Schönhausen, பிரசியா
இறப்பு 30 சூலை 1898(1898-07-30) (அகவை 83)
Friedrichsruh, ஜேர்மனி
அரசியல் கட்சி இல்லை
வாழ்க்கை துணைவர்(கள்) யொகானா ஃபொன் புட்காமெர்
சமயம் Lutheran
கையொப்பம்

ஒட்டோ எடுவார்ட் லியோபோல்ட் ஃபொன் பிஸ்மார்க் (Otto Eduard Leopold von Bismarck - 1 ஏப்ரல் 1815 – 30 ஜூலை 1898), 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரசிய நாட்டினதும், பின்னர் ஜேர்மனியினதும் அரசியலாளர் ஆவார். 1862 - 1890 வரை பிரசியாவின் பிரதம அமைச்சராக இருந்த இவர் ஜேர்மனியை ஒன்றிணைப்பதில் முன்னின்றார். 1867 தொடக்கம், வட ஜேர்மன் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். இரண்டாம் ஜேர்மன் பேரரசு நிறுவப்பட்டபோது பிஸ்மார்க் அதன் தலைவர் (Chancellor) ஆகி நடைமுறை அரசியல் (Realpolitik) நடத்தினார். இதனால் இவரை இரும்புத் தலைவர் (Iron Chancellor) என அழைத்தனர். நாட்டின் தலைவராக பிஸ்மார்க், ஜேர்மன் அரசில் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்ததுடன், தனது பதவிக் காலத்திலும் அதற்குப் பின்னரும்கூட ஜேர்மனியின் அரசியலிலும், அனைத்துலக மட்ட அரசியலிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தினார்.

இளமைக்காலம்[தொகு]

பிஸ்மார்க் பிரசிய மாகாணமான சக்சனியில், பெர்லின் நகருக்கு மேற்கில் அமைந்திருந்த செல்வந்தக் குடும்பமொன்றின் எஸ்டேட்டான சோன்ஹோசென் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை கார்ல் வில்ஹெல்ம் பேர்டினண்ட் ஃபொன் பிஸ்மார்க் ஒரு நில உரிமையாளரும், முன்னாள் படைத்துறை அலுவலரும் ஆவார். தாயார், வில்ஹெமின் லூயி மென்கென், அரசியல்வாதியான ஏ. ஜே. பி டெயிலரின் கல்வியறிவு கொண்ட மகளாவார். பிஸ்மார்க் தனது தந்தையாரைப் போலப் பிரபுத்துவத் தோற்றத்துடனேயே வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டார். இவர் ஒரு முறையான படைத்துறை அலுவலராக இல்லாதிருந்தபோதும், படைத்துறைச் சீருடை போலவே உடையணிந்தார். எனினும், இவர் பொது நோக்காளராகவும், இவரது பின்னணியைச் சேர்ந்த ஆண்கள் பலருக்கு மாறாக நல்ல கல்வியறிவு பெற்றவராகவும் இருந்தார். மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய திறன் இவருக்கு இருந்தது. இளைஞராக இருந்தபோது, தனது மனைவிக்கு எழுதிய கடிதங்களில் ஷேக்ஸ்பியரையும், பைரனையும் மேற்கோள் காட்டுவதுண்டு.

கல்வி[தொகு]

21 வயதில் பிஸ்மார்க், 1836

பிஸ்மார்க், ஜோஹன் எர்ன்ஸ்ட் இல் அடிப்படை பள்ளியில் கல்வி பயின்றார். பிரெடெரிக்-வில்ஹெல்ம் மற்றும் க்ராவுஸ் க்லோஸ்டரில் உயர்நிலை கல்வியை பயின்றார். அவர் பெர்லின் , கோட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

ஆரம்ப அரசியல் ஈடுபாடு[தொகு]

1847, 32 அன்று அவரது திருமணம் முடிந்த அதே ஆண்டில், பிஸ்மார்க் என்று புதிதாக உருவாக்கப்பட்ட ப்ருச்சியன் சட்டமன்றத்தில், ஒரு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு, அவர் உணர்வை பேச்சுக்களின் மூலம் வெளிபடுத்தினார்.அதனால் வெளிப்படையாக மன்னர் ஆட்சி ஒரு பிற்போக்கு அரசியல் என நிருபித்தார்.

Otto Fürst von Bismarck became Chancellor of Germany in 1871.

மார்ச் 1848 ல், ப்ருஸ்ஸியா ஒரு புரட்சியை சந்தித்தது.முதலில் மன்னர் எழுச்சியை அடக்குவதற்கு இராணுவத்தை பயன்படுத்தி எதிர்கொண்டனர்.எனினும் ஆரம்பத்தில் ஈடுபட்டவர்களை அடக்க முடியவிலை.எனவே, இறுதியில் போட்ஸ்டாம் இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்புக்காக மன்னர் தாராளவாதிகளுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படும். அவர், கறுப்பு, சிவப்பு மற்றும் தங்க புரட்சிகர நிறங்கள் அணிந்த போராளிகளிடம் ஒரு அரசியல் பிரசுரத்தை உறுதியளித்தார். ப்ருஸ்ஸிய மற்றும் பிற மாநிலங்களை நாடுகளை ஒன்றாக்க வேண்டும் என்ற கோறிக்கையை ஒப்புகொண்டார்.இதுவே ஒட்டோ ஃபொன் பிஸ்மார்கின் முதல் அரசியல் சார்ந்த போராட்டம் ஆகும்.

ஜெர்மன் பேரரசின் அதிபர்[தொகு]

பல போராட்டங்களுக்கு பின்னர் பிஸ்மார்க் ஜெர்மன் பேரரசின் அதிபரானார்.

1873 இல் பிஸ்மார்க்.

1871 இல், ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் புர்ஸ்ட் (பிரின்ஸ்) பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவர் ஜெர்மன் பேரரசின் இம்பீரியல் அதிபராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் ப்ருச்சியன் அலுவலகங்களிலும் (அமைச்சர், ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் உட்பட சில பதவிகள்) நீடித்தார்.பின்னர் அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.பின் பிஸ்மார்க் மீண்டும் எம்.பி. ஆனார்.


ஒட்டோவின் காப்பீட்டு திட்டம்[தொகு]

1889 இல் வயது முதிர்ந்தோர் மற்றும் இயலாதோர் காப்பீட்டு மசோதாவை ஓட்டோ அறிமுகப்படுத்தினார். முதியோர் ஓய்வூதிய திட்டம், முதலாளிகளுக்கு சமமாக தொழிலாளர்களுக்கும் காப்பீடு ஆகியவற்றையும் ஒட்டோ அறிமுகப்படுத்தினார். 70 வயதுக்கு அடைந்த தொழிலாளர்களுக்கு ஒரு ஓய்வூதிய தொகை வழங்கவும் செய்தார்.விபத்து காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு திட்டங்கள் போலல்லாமல், இந்த திட்டம் அனைத்து தொழிலாளர்கள், தொழில் வகைகள், விவசாய, கைவினைஞர்கள் மற்றும் தொடக்க ஊழியர்கள் போன்ற அனைவரும் பயன்பெற்றனர். மாநிலம் அல்லது மாகாண அரசு இந்த திட்டங்களை நேரடியாக மேற்பார்வை செய்தன.