எலிசெபெத் அன் நல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசெபெத் அன் நல்லி
Elizabeth Ann Nalley Innovation Day 2006 crop.jpg
பிறப்புகேத்ரான், மிசௌரி, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வாழிடம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்
துறைவேதியியல்
பணியிடங்கள்கேமரூன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்நார்த் ஈஸ்ட்டர்ன் மாநிலப் பல்கைக்கழகம், ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம், டெக்சாஸ் மகளிர் பல்கலைக்கழகம்
விருதுகள்தொழில்சார் சிறப்புக்காக ஐயோட்டா சிக்மா பை விருது (2005)

எலிசபெத் ஆன் நல்லி (Elizabeth Ann Nalley) ஆன் நல்லி என்றும் அழைக்கப்படுகிற இவர் ஒரு அமெரிக்க வேதியியலாளரும் ஓக்லகோமாவின் லாட்டனில் உள்ள கேமரூன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியருமாவார்.[1] நல்லி சூலை, 1942 இல் மிசௌரியில் உள்ள கேத்ரானில் பிறந்தார்.[2] 1965 இல் ஓக்லகோமாவில் உள்ள தக்லெக்வாவில் உள்ள வடகிழக்கு மாநில பல்கலைக்கழகத்தில் வேதியியல் கல்வியில் இளம் அறிவியலும் 1969இல் ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகத்திலிருந்து பகுப்பாய்வு வேதியியலிலும் முதுநிலை அறிவியல் பட்டமும் , 1975 இல் டெக்சாஸ் பெண்கள் பல்கலைக்கழகத்தில் கதிர்வீச்சு வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். [2][3][4] 1964 முதல் 1965 வரை முஸ்கோகி மத்திய உயர்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் இளங்கலைக் கல்வியை முடிப்பதற்கு முன்பே வேதியியல் பயிற்றுவிப்பாளராக தனது வாழ்க்கை தொடங்கினார். 1969 ஆம் ஆண்டில், அவர் கேமரூன் பல்கலைக்கழக பீடத்தில் பயிற்றுவிப்பாளராகச் சேர்ந்தார், மேலும் அவர் 1978 ஆம் ஆண்டு முதல் முழு நேரப் பேராசிரியராக (கேமரூனின் முதல் பெண் முழுப் பேராசிரியர்) இருந்து வருகிறார்.[2][3]

பை கப்பா பை என்ற கௌரவ சங்கத்தின் இயக்குநர்கள் குழுவில் 21 ஆண்டுகள் நல்லி பணியாற்றியுள்ளார். மேலும், 1995 முதல் 1998 வரை தலைவராகவும் இருந்தார்.[5] 2005 ஆம் ஆண்டில், இவருக்கு தொழில்முறை சிறப்புக்கான ஐயோட்டா சிக்மா பை விருது வழங்கப்பட்டது.[6] 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க வேதியியல் குமுகத்தின் தலைவராக பணியாற்றினார்.[7] மேலும் 2015 ஆம் ஆண்டில் வேதியியல் அறிவியலில் பெண்களை ஊக்குவிப்பதற்காக ஏசிஎஸ் விருதைப் பெற்றார்.[8]

சான்றுகள்[தொகு]

  1. "2015 National Award Recipients". 2016-03-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 "50 Making a Difference profile: Elizabeth A. Nalley, Cameron University, Lawton", The Journal Record, September 26, 2008[தொடர்பிழந்த இணைப்பு].
  3. 3.0 3.1 C.V. பரணிடப்பட்டது 2010-05-27 at the வந்தவழி இயந்திரம் from Nalley's web site.
  4. Faculty hall of fame award 1996: Dr. E. Ann Nalley பரணிடப்பட்டது 2010-05-27 at the வந்தவழி இயந்திரம், Cameron University Office of Alumni Relations.
  5. Speaker bios, Human Rights Day Event, Chemistry and the Middle East: Honoring Dr. Zafra M. Lerman, AAAS.
  6. 2005 Iota Sigma Pi Award in Professional Excellence பரணிடப்பட்டது 2009-05-14 at the வந்தவழி இயந்திரம், Iota Sigma Pi.
  7. Gradoz, Angela (December 6, 2004), "Nalley named president of the American Chemical Society", Cameron Collegian, 2006-09-20 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  8. "2015 National Award Recipients". American Chemical Society. 2016-03-20 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசெபெத்_அன்_நல்லி&oldid=3536203" இருந்து மீள்விக்கப்பட்டது