எலிசபெத் அலெக்சாந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் அலெக்சாந்தர்
Elizabeth Alexander
பிறப்புபிரான்செசு எலிசபெத் சோமர்வில்லி கால்டுவெல்
திசம்பர் 13, 1908(1908-12-13)
மெர்ட்டன், சரே, இங்கிலாந்து
இறப்பு15 அக்டோபர் 1958(1958-10-15) (அகவை 49)
இபாதான், நைஜீரியா
தேசியம்பிரித்தானியர்
துறை
கல்வி கற்ற இடங்கள்நியூன்காம் கல்லூரி, கேம்பிரிட்சு
துணைவர்நார்மன் அலெக்சாந்தர்

பிரான்செசு எலிசபெத் சோமர்வில்லி கால்டுவெல் (Frances Elizabeth Somerville Alexander, 13 திசம்பர் 1908 – 15 அக்டோபர் 1958) ஒரு பிரித்தானியப் புவியியலாளரும் கல்வியியலாளரும் இயற்பியலாளரும் கதிர்வீச்சு வானியலாளரும் ஆவார். இவரது போர்க்கால இராடார் பணிகளும் வானொலிப் பணிகளும் கதிர்வீச்சு வானியலைத் தோற்றுவித்தன. இவர் முனைவர் பட்டத்தை கேம்பிரிட்ஜின் நியூன்காம் கல்லூரியில் பெற்றார். இவர் 1938 முதல் 1941 வரை சிங்கப்பூர் நாவாய்த் தளத்தில் கதிர்வீச்சு திசை கண்டுபிடிப்பில் ஈடுபட்டார். சிங்கப்பூருக்கு நியூசிலாந்தில் இருந்து வர முடியாத்தால் 1941 சனவரியில், நியூசிலாந்து வெல்லிங்டனில் இருந்த வானொலி வளர்ச்சி ஆய்வகத்தில் செயல்முறை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஆனார். 1945 இல், நார்போக் தீவில் உணரப்பட்ட பிறழ்வான இராடார்க் குறிகைகள் சூரியனால் உருவாகியவை என இவர் மிகச் சரியாக விளக்கினார். கதிர்வீச்சு வானியலில் இந்த விளக்கம் மிக முன்னோடிப் பணியாகும். இவர் இதனால் முதல் பெண் கதிர்வீச்சு வானியலாளர் ஆனார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]