உள்ளடக்கத்துக்குச் செல்

எலன் மேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனித் தகவல்
பிறப்பு14 மார்ச்சு 1977 (1977-03-14) (அகவை 47)
கேரளம், இந்தியா
விளையாடுமிடம்இலக்குக் காவலர்
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
இந்தியன் இரயில்வே
தேசிய அணி
1992-2006இந்தியா
பதக்க சாதனை
பெண்கள் வளைதடிப் பந்தாட்டம்
நாடு  இந்தியா
வெற்றியாளர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2002 யோகன்னசுபர்க்கு அணி
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2002 மான்செசுட்டர் அணி
ஆப்ரோ-ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் ஐதராபாத்து அணி
பெண்கள் ஆசியக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2004 புது தில்லி அணி

எலன் மேரி இன்னசெண்ட்டு (Helen Mary Innocent) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட வீராங்கனையாவார். 1977 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். வளைகோல் பந்தாட்ட அணியில் இலக்கு காவலராக எலன் விளையாடுகிறார். செருமனிக்கு எதிரான போட்டித் தொடரில் 1992 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக பன்னாட்டுப் போட்டிகளில் எலன் அறிமுகமானார்.[1][2] 2003 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த ஆப்பிரிக்க-ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான பட்டத்தை வெல்ல இறுதி சமன் முறிவு முயற்சியில் இரண்டு தண்ட அடிகளைத் தடுத்து எலன் காப்பாற்றினார். எலன் மேரிக்கு இந்திய அரசாங்கம் அருச்சுனா விருதை வழங்கி சிறப்பித்தது.[3]

பன்னாட்டு மூத்தோர் போட்டிகள்

[தொகு]
  • 1996 – இந்திரா காந்தி தங்கக் கோப்பை, புது தில்லி
  • 1997 – 1997 பெண்கள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று, அராரே (4ஆவது)
  • 1998 – 1998 பெண்கள் உலகக்கோப்பை, உட்ரெக்ட்டு (12ஆவது)
  • 1998 – 1998 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள், கோலாலம்பூர் (4ஆவது)
  • 1998 – 1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,பாங்காக்கு (2ஆவது)
  • 1999 – ஆசியக் கோப்பை, புது தில்லி (2ஆவது)
  • 2000 – 2000 பெண்கள் ஒலிம்பிக் தகுதிச் சுற்று, மில்டன் கெயின்சு (10ஆவது)
  • 2001 – 2001 பெண்கள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று, அமியன்சு/அப்வில்லே (7ஆவது)
  • 2002 – 2002 பெண்கள் வெற்றியாளர் போட்டி, யோகன்னசுபர்க்கு (3ஆவது)
  • 2002 – 2002 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள், மான்செசுட்டர் (1ஆவது)
  • 2002 – 2002 ஆசியக் கோப்பை, பூசன் (4ஆவது)
  • 2003 – ஆப்ரோ-ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஐதராபாத்து (1ஆவது)
  • 2004 – ஆசியக் கிண்ணம், புது தில்லி (1ஆவது)
  • 2006 – 2006 பொதுநலவாய விளையாட்டுக்கள்,மெல்போர்ன் (2ஆவது)
  • 2006 – 2006 பெண்கள் உலகக்கோப்பை, மாட்ரிட்டு (11ஆவது)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "First half, second half and better half". DNA India (in ஆங்கிலம்). 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
  2. Sudevan, Praveen. "The story of PR Sreejesh: How a scrawny lad from Kerala went on to become an Indian hockey great". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
  3. "President gives away Arjuna Awards and Dronacharya Awards". pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலன்_மேரி&oldid=3724458" இலிருந்து மீள்விக்கப்பட்டது