எர்பெர்ட் ஃபிரீடுமேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எர்பெர்ட் ஃபிரீடுமேன்
பிறப்புசூன் 21, 1916(1916-06-21)
புரூக்ளின், நியூயார்க்
இறப்புசெப்டம்பர் 9, 2000(2000-09-09) (அகவை 84)
ஆர்லிங்டன், வர்ஜீனியா
தேசியம்அமெரிக்கர்
அறியப்படுவதுதொலைவறி ஏவுகலங்கள்
விருதுகள்தேசிய அறிவியல் விருது (1968)
எடிங்டன் பதக்கம் (1964)
வில்லியம் பவுலே பதக்கம் (1981)
ஊல்ஃப் அறக்கட்டளையின் இயற்பியல் பரிசு
ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன் பதக்கம்

எர்பெர்ட் ஃபிரீடுமேன் (Herbert Friedman, ஜூன் 21, 1916 – செப்டம்பர் 9, 2000) சூரிய இயற்பியல், காற்றியல், வானியல் ஆகிய அறிவியல் புலங்களில் தொலைவறி ஏவுகலங்களைப் பயன்படுத்திய அமெரிக்க முன்னோடியாவார். இவர் அரசியல் மேதையும் அறிவியலுக்காக வாதிடுபவரும் ஆவார்..இவர் தன் வாழ்நாளில் அரசு வானியல் கழகத்தின் எடிங்டன் பதக்கம் 1964, அமெரிக்க வானியல் கழகத்தின் ஃஎன்றி-நோரிசு விரிவுரைத் தகைமை, தேசிய அறிவியல் விருது 1968, அமெரிக்கப் புவிபுறவியல் ஒன்றியத்தின் வில்லியம் பவுலே பதக்கம் 1981, இயற்பியலுக்கான வுல்ஃப் அறக்கட்டளைப் பரிசு, பிராங்க்ளின் நிறுவனத்தின் ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன் பதக்கம் (1972) எனப் பல பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.[1] இவர் 1960 இல் அமெரிக்கத் தேசியாறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார்.[2] இவர் அமெரிக்க மெய்யியல் கழகத்தின் உறுப்பினராக 1964 இல் தேர்வு செய்யப்பட்டார்.

வாழ்க்கைப் பணி[தொகு]

ஃப்ரீடுமேன்1916 ஜூன் 26 இல் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் சாமுவேல் என்பவருக்கும் இரெபாக்கா ஃபிரீட்மேனுக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தார் .[3] இவரது தந்தையார் மரபுவழி யூதர். இவர் நியூயார்க் நகருக்கு இந்தியானாவில் உள்ள எவான்சுவில்லியில் இருந்து புலம்பெயர்ந்தவர். நியூயார்க்கில் இவர் கலைப்படச் சட்டக்க் கடையை மன்ஃஆட்டனில் நிறுவினார்.. ஃபிரீடுமேனின் தாயார் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்தவர். இலமையில் இவர் ஓர் ஏதிலிச் சிறுவனாக ஓவியராகத் தனது படங்களை விற்றே பிழைத்துள்ளார். இவர் 1932 இல் புரூக்ளின் கல்லூரியில் கலையியல் முதன்மைப் பாட்த்தில் சேர்ந்தார். என்ராலும் அங்கு இயற்பியலில் தேறிப் இலவல் பட்டம் பெற்றுள்ளார். இவர் இயற்பியல் பேராசிரியரான முனைவர் பெர்னார்டு குரெல்மேயரால் பெரிதும் கவரப்பட்டு அவர் ப்ரிந்துரை பேரில் ஜான் ஃஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் உதவிதொகை பெற்று சேர்ந்துள்ளார். இங்கே இவரது பேராசிரியரின் தந்தையார் செருமானிய மொழித்துறைத் தலைவராக பணிபுரிந்தவர்.

இவர் இலிண்டன் ஜான்சன் குடியரசுத் தலைவராக இருந்தபோது அமெரிக்க அணுவாற்றல் ஆணையத்தின் பொது அறிவுரைக்குழுவிலும் குடியரசுத் தலைவர் நிக்சன் அறிவியல் அறிவுரைக்குழுவிலும் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் விண்வெளி அறிவியல் ஆளுகை குழுமத்திலும் பணிபுரிந்துள்லார்.

இறப்பு[தொகு]

இவர் தன்84 ஆம் அகவையில் புற்றுநோயால் வ்ர்ஜீனியாவில் உள்ள ஆர்லிங்டன் வீட்டில் 2000 செப்டம்பர் 9 இல் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

The Amazing Universe, by Herbert Freidman. National Geographic Society, c1975.

வெளி இணைப்புகள்[தொகு]