எர்னசுடு லுட்விக் ஆல்பிரட் கெகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பிரட் கெகர்

எர்னசுடு லுட்விக் ஆல்பிரட் கெகர் (Ernst Ludwig Alfred Hegar) என்பவர் ஆல்பிரெட் கெகர் என்றும் அறியப்படுகிறார். இவர் செருமன் நாட்டினைச் சார்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். இவர் புதிய மருத்துவ கருவிகள் மற்றும் நுட்பங்களை உருவாக்கியதில் புகழ்பெற்றவர். கெகர் 1830ஆம் ஆண்டு சனவரி மாதம் 6 நாளன்று செருமனியின் டார்ம்ஸ்டாடில் பிறந்தார். 5 ஆகத்து 1914 அன்று இறந்தார். இவரது உடல் பிரிசுகோவில் அடக்கம் செய்யப்பட்டது.

கெகர் நாட்டு மருத்துவரான ஜோகன் ஆகசுடு கெகரின் மகன் ஆவார். இவர் கீசென், ஐடெல்பெர்க், பெர்லின் மற்றும் வியன்னாவில் மருத்துவம் பயின்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு தரைப்படையில் சேர்ந்து தரைப்படை மருத்துவராக பணியாற்றினார். பின்னர் இவர் டார்ம்ஸ்டாட் நகரில் மகப்பேறியல் நிபுணராகத் தனியார் பயிற்சிக்குச் சென்றார்.

1864ஆம் ஆண்டில் பிரீபர்க் பல்கலைக்கழகத்தில் மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் பேராசிரியராக ஓட்டோ ஸ்பீகல்பெர்க் கைத் தொடர்ந்து ஆல்பிரட் கெகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1868ஆம் ஆண்டில் பிரீய்பர்க் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் யுனிவர்சிட்டட்ஸ்-ஃப்ரான்க்லினிக் பல்கலைக்கழகத்தின் முதல் தலைவராக இருந்தார். 1898ஆம் ஆண்டில் கெகர் "பீட்ராகே ஜுர் கெபூர்தில்ஃப் அண்ட் கைனகோலாஜி" என்ற பத்திரிகையையும் நிறுவினார். கிருமி நாசினிகள் மற்றும் கிருமி நாசினி நடைமுறைகளின் முன்னோடியாக இருந்தார். கெகர் 1904-இல் பணி ஓய்வு பெற்றார்.

கெகர் உருவாக்கிய பல நுட்பங்கள் மற்றும் கருவிகளில் கெகரின் குறியீடு மற்றும் கெகர் விரிவடைதல்கள், கெகரின் அறுவை சிகிச்சை (சிதைந்த பெரினியத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை) அடங்கும். இவரது படைப்புகள் இன்னும் உலகெங்கிலும் உள்ள மகப்பேறியல் கல்லூரிகளில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன.[1][2]

மகளிர் மருத்துவ நிபுணர் ருடால்ப் கால்டன்பாக்குடன் (1842-1893) இணைந்து, மூன்று பதிப்புகளில் வெளியிடப்பட்ட செயல்முறை மக்கட்பேரியல் இதழின் இணை ஆசிரியராக இருந்தார்.[3]

குறிப்புகள் மற்றும் மேலதிக வாசிப்பு[தொகு]

  • பால் டிப்ஜென்: Die deutsche Medizin und Gynäkologie im Zeitalter der Wissenschaftlichen Anfänge von Alfred Hegar, Deutsche Medizinische Wochenschrift, பெர்லின், 1930.
  • ஏ. மேயர்: Alfred Hegar und der Gestaltwandel der Gynäkologie seit Hegar, ஃப்ரீபர்க், 1961.
  • டோர்லாண்டின் இல்லஸ்ட்ரேட்டட் மருத்துவ அகராதி

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.cambridge.org/core/books/abs/eponyms-and-names-in-obstetrics-and-gynaecology/hegar-alfred-18301914/406BC234F3042B36F25538F7291873DA
  2. 1. Baskett TF. Hegar, Alfred (1830–1914): Hegar’s Dilators/Hegar’s Sign. In: Eponyms and Names in Obstetrics and Gynaecology. Cambridge University Press; 2019:177-178.
  3. ADB: Kaltenbach, Rudolf @ Allgemeine Deutsche Biographie

வெளி இணைப்புகள்[தொகு]

  • Works by or about Ernst Ludwig Alfred Hegar at Internet Archive