எரிக்கோ ஆளுநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எரிக்கோ ஆளுநரகம்
ஐக்கிய நாடுகள் சபையின் வரைபடமானது, இந்த ஆளுநரகத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளைக் காட்டுகிறது
ஐக்கிய நாடுகள் சபையின் வரைபடமானது, இந்த ஆளுநரகத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளைக் காட்டுகிறது
Location of {{{official_name}}}
நாடு பலத்தீன்

எரிக்கோ கவர்னரேட் (Jericho Governorate, அரபு மொழி: محافظة أريحا Muḥāfaẓat Arīḥā ; எபிரேயம்: נפת יריחו‎ , Nafat Yeriħo ) என்பது பாலஸ்தீனத்தின் 16 ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது மேற்குக் கரையின் கிழக்குப் பகுதிகளிலும், வடக்கு சாக்கடல் மற்றும் ஜோர்தானின் எல்லையில் தெற்கு ஜோர்டான் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. ஆளுநரகமானது ரம்லாவிற்கு கிழக்கேயுள்ள மலைகள் வரை, எருசலேமின் கிழக்கு சரிவுகளிலும், யூதேயப் பாலைவனத்தின் வடக்கு எல்லைகள் உள்ளிட்ட பகுதிகளில் பரவியுள்ளது. ஜெரிகோ கவர்னரேட்டின் மக்கள் தொகை 31,501 என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் ஆளுநரகத்தின் முகாம்களில் சுமார் 6,000 பாலஸ்தீனிய அகதிகள் உள்ளனர். [1]

மாவட்டத்தின் பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக இதன் தலைநகரான எரிக்கோவுக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் வேளாண்மை நடக்கிறது. பெரும்பாலும் எரிக்கோ உலகின் பழமையான தொடர்ச்சிமிக்க குடியிருப்பாகக் கருதப்படுகிறது; இதன் வரலாறும், தொல்லியல் தளங்களு ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

எலிஷியாவின் பூங்கா (எலிசீஸ் ஸ்பிரிங் மற்றும் ஐன் எல்-சுல்தான் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது எரிக்கோ மாவட்டத்தில் உள்ள ஒரு பாலைவனச்சோலை ஆகும். இது பழத்தோட்டங்கள், பனைத் தோப்புகள், வாழைத் தோட்டங்கள் மற்றும் பிற தாவரங்களை கொண்டுள்ளது. [2]

வட்டாரங்கள்[தொகு]

மாநகரங்கள்[தொகு]

நகராட்சிகள்[தொகு]

 • அல்-அவுஜா
 • அல்-ஜிஃப்ட்லிக்

கிராமங்கள்[தொகு]

 • ஃபசாயில்
 • அன் நுவைமா
 • ஐன் அட்-துயுக் அட்-தஹ்தா
 • ஐன் அட்-துயுக் அல்-ஃபோகா
 • அஸ் ஜூபைதத்
 • மார்ஜ் அல்-கசல்

அகதிகள் முகாம்கள்[தொகு]

 • அகபாத் ஜாபர்
 • ஐன் அஸ்-சுல்தான்

குறிப்புகள்[தொகு]

 1. "The Administrative Divisions of Governorates (Jericho)". Palestinian National Information Centre – Palestinian National Authority. 2007-10-24 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 2. "Laureates 1999". World Heritage Centre.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்கோ_ஆளுநரகம்&oldid=3084795" இருந்து மீள்விக்கப்பட்டது